நமது முழுமஹாபாரத விவாத - TopicsExpress



          

நமது முழுமஹாபாரத விவாத மேடையில் ஒரு நண்பர் Illegal relationship in Mahabaratha First of all I appologize that I am not able to type this in Tamil. I have read Rajajis Mahabaratha and was reading Jeya by Devdutt Patnaik. I have seen the B.R. Chopras Mahabaratha with the commentary in Thuglak. With many differences between these narrations I always was wondering Is there a original Mahabaratha?. When I was searching for this in the internet I came across Gangulis Mahabaratha in English. Somehow I perfer reading Mahabaratha in Tamil than in English. When I saw there is an effort to translate that in Tamil I was really happy. Thanks for the monumental effort and let Vyasa be with you to finish this effort in glory. Now, coming to the topic. I am not sure if this topic was discussed before in detail. Eventhough I like Mahabaratha which talks about so many good things, I was always baffled by the amount of illegal relationships shown in Mahabaratha. I have given few examples below. 1. Right fromt he birth of Vyasa. A great muni like Parasarra shown a moment of weakness 2. Birth of Pandu and Dhritarastra 3. Birth of Pandavas 4. Birth of Drona, eventhough there is no illegal relationship here but it showed the moment of weakness of the great sage Bharadwaja If you read Devdutt Patnaiks Jeya, there are more things in the way Chandravamsam was even created. This creates problem when you teach Mahabaratha to my daughter or even explain it to people of other religion Let me know if there is any answer to this question ******************************************** நண்பரே தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லையென்றால், அது பிழையல்ல. 1. வியாசர் பிறப்பு பராசரர் நீ எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய். என்று சொல்லி நறுமணத்தையும் வரமாகக்கொடுகிகறார். அப்படி வரத்தை அடைந்து, நறுமணமாகி, கன்னித்தன்மையும் பாழ்படாமல் இருந்த சத்தியவதி, பராசரரின் அணைப்பை ஏற்றதால், கருத்தரித்தாள். யமுனையின் தீவு ஒன்றில், அந்த நாளிலேயே (கருக்கொண்ட அந்நாளிலேயே) பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்டு பராசரரின் குழந்தையை {வியாசரைப்} பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} அனுமதியைப் பெற்று, ஆன்மிகத்தில் தனது மனதைச் செலுத்தியது. சில நிகழ்வுகளால், நீ என்னை நினைக்கும் போது, நான் உன் முன் தோன்றுவேன், என்று சொல்லிவிட்டு பராசரருக்குப் பிறந்த மகன் {வியாசர்} சென்றுவிட்டார். - See more at: mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section63c.html இவை அனைத்தும் ஒரே நாளில் நடப்பதாக மகாபாரதம் சொல்கிறது. 2. பாண்டு மற்றும் திருதராஷ்டிரனின் பிறப்பு அரச வம்சம் தழைக்க வேறு வழியே இல்லை என்ற நிலையில் அது ஏற்கப்படுகிறது. அதுவும் அந்தக் காலத்தில் ஏற்கப்பட்ட நெறிமுறையைக் கைக்கொண்டு ஏற்கப்படுகிறது see more at: mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section105.html 3. பாண்டவர்களின் பிறப்பு இங்கும் வேறு வழியில்லை. பாண்டு உறவு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறான். அல்லது சக்தியை இழந்துவிட்டான் என்றே வைத்துக் கொள்வோம். அவன் சொர்க்கமடைய பிள்ளையைப் பெற வேண்டும் என்று நினைக்கிறான். அந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட நடைமுறையைக் கைக்கொள்ளச் சொல்கிறான். அங்கும் குந்தி அப்படிச் செய்யாமல் தனக்கு துர்வாசரால் கொடுக்கப்பட்ட மந்திரத்தை உபயோகப்படுத்தி பாண்டவர்களைப் பெற்றெடுக்கிறாள். //அதன் பிறகு அந்த அழகான குந்தி, அந்த நீதி தேவனுடன் ஆன்ம வடிவில் கலந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும் மகனைப் பெற்றாள்.// - See more at: mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section123.html 4. துரோணரின் பிறப்பு சுயத்தை ஒடுக்கியிருக்கும் துறவியருக்கும், மோகம் உண்டு என்பதை நிரூபிக்கும் ஒரு சம்பவம் இது. see more at: mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section131.html மேற்கண்ட நான்கையும் அணுக நீங்கள் வியாசரிடமே செல்ல வேண்டும் {அதாவது சௌதி அருளிய வியாச பாரதத்தையே அணுக வேண்டும்}. மறுவாசிப்புகள் மேலும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். அதைத் தனி ஆக்கமாகத் தான் பார்க்க வேண்டுமேயொழிய அசல் பதிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. மஹாபாரதத்தை முழுமையாக அறிய வயது வரம்பு அவசியம் வேண்டும். சிறுவர்களுக்குக் கதை சொல்ல சில பகுதிகளைத் தணிக்கை செய்து சொல்லலாம். அல்லது சிறுவர்களுக்காக அமர் சித்ர கதா காமிக்சுகளை வாங்கிக் கொடுக்கலாம். மஹாபாரதத்தில் கற்க எவ்வளவோ இருக்கும்போது இந்த சில விஷயங்களுக்காக அதைப் புறக்கணிப்பது பெரும் பிழையாகும் எனக் கருதுகிறேன். ஒரு லட்சம் சுலோகங்களால் ஆன படைப்பு என்பார்கள் மஹாபாரதத்தை, அதில் மிஞ்சிப் போனால் ஐம்பது சுலோகங்கள் கூட இது போல இருக்காது. அப்படியே இருந்தாலும் அந்த ஐம்பது சுலோகங்களுக்கு மீதம் உள்ள அனைத்து சுலோகங்களையும் புறக்கணிப்பது ஞானமாகாது. நன்றி அன்புடன் செ.அருட்செல்வப்பேரரசன் ******************************************** Thanks for your reply My point definitely is not rejecting Mahabaratha because of these incidents. First I am trying to understand why these incidents are coming in first place. Secondly when many great sages are commiting these mistakes and more justifying by their powers, the teachings of them will get questioned as well. Third, I am not sure if there are only few incidences. Marrying multiple people is there throughout Mahabaratha. Is that accepted, I am not sure? ******************************************** நண்பரே அந்தக் காலத்தில் மன்னர்கள் பலரை மணப்பது என்பது இயல்புதான். தன் நாட்டின் பாதுகாப்புக்காக மன்னர்கள் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது. மன்னனே role model என்பதால் சில அமைச்சர்களும், சில உயர் குடிமக்களும் கூட அப்படி இருந்திருக்கலாம். ஆனால், சாதாரண மனிதர்களுக்கு அது விலக்கப்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும். காமத்தை வெல்லவே முனிவர்கள் அனைத்தையும் துறக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களையே காமம் வீழ்த்திவிடும் என்பதைக் காட்டுவதற்காகக் கூட இதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன். மேலும், மகாபாரதத்தில் வரும் பெரும் துறவிகளின் இத்தகு செயல்கள், அந்தக் காவியத்திலேயே விமர்சனத்திற்கும், நிந்தனைக்கும் உள்ளாகியிருக்கின்றன என்பதையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். அறம் மிக நுட்பமானது என்று எண்ணற்ற இடங்களில் மஹாபாரதம் திரும்பத் திரும்பப் போதிக்கிறது. இக்கதைகளின் மூலம் நமக்கு ஏதோ அறத்தைப் போதிக்க நினைத்திருக்கிறார் வியாசர். ஆனால் அது மிக நுட்பமானதாக இருப்பதால், அதை நம்மால் அறியமுடியவில்லை என்று நாம் இவ்விஷயங்களில் சமாதானம் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அப்படிச் சமாதானமடைந்தால் மட்டுமே மஹாபாரதம் சொல்லும் பிற நீதிகளை நம்மால் ஏற்க முடியும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த மகாபாரதத்தின் ஆசிரியரான வியாசர் இதை மறைக்க நினைத்திருந்தால் எளிதாக மறைத்திருக்கலாமே! ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லையே. தனது நாயகர்களின் பிறப்பைக் கேள்விக்குறியாக்க எந்தக் கதாசிரியன் துணிவான். தம்பி அப்படிப் போனால் விழுந்துவிடுவாய் என்று ஒரு குடிகாரன் சொன்னான் என்பதற்காக, ஏற்கனவே சென்று விழுந்தவனின் அனுபவத்தை ஏற்றுக் கொள்ளாமல், குடிகாரன் பேச்சுதானே என்று அதை முற்றிலும் உதாசீனப்படுத்த முடியாதல்லவா? அப்படியும் இதை எடுத்துக் கொள்ளலாம். அந்தக் குடிகாரன் நல்லவனா கெட்டவனா என்ற விவாதத்துக்குள் நாம் போக வேண்டாம். வாழ்ந்து கெட்டவர்களின் முதுமொழிகள், நமக்கு வாழ்ந்து பார்க்காத அனுபவத்தைக் கொடுக்கின்றன என்றால், அது மிகையல்ல. அனுபவமே ஞானம், ஞானமே செல்வமல்லவா? விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எதுவும் கிடையாது என்பதும் உண்மைதான். ஆனால், அது {கதையில்} மேற்கொண்டு நம்மை நகரவிடாமல் தடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வளவும் சொன்னேன். நன்றி அன்புடன் செ.அருட்செல்வப்பேரரசன்
Posted on: Mon, 28 Jul 2014 18:06:46 +0000

Trending Topics



3923975047">As part of our periodic discount, here is what we have for
Obituário de 04 de Julho de 2013. - Zilda Bornschein, 85 anos,
Central Tools Cen3d101 0 To 1 Inch Dial Indicator Set With
Any Patriotic Benue Citizen should not miss this important
Receptionist / Administration Assistant We are leading Roofing
Warning: Work Related Post This is for any coaches and parents
2 more days til THA People throw down! Shouts to the beautiful
Location: Catalunan Grande, Davao City Two units available Lot
Innocent Secret Star Girl Eyelashes Ss.13 CHECK YOUR PRICES NOW!
NAUFRAGO. Vi a ese hombre taciturno y cabizbajo. Lo vi como

Recently Viewed Topics




© 2015