பார்வையாளர்கள் - TopicsExpress



          

பார்வையாளர்கள் அனைவரையும் அவமானப்படுத்திய டி.வி. நிகழ்ச்சி (சற்று முழுமையாக வாசிக்கவும்) History Tv-ல் Derren Brown என்பவர் பிறரை வசியப்படுத்தும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது அமெரிக்காவில் நடக்கும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் Derren Brown தன்னால் பிறரை வசியப்படுத்த முடியும் என்றும், தன்னுடைய கட்டுப்பாட்டில் ஒருவரை கொண்டு வர முடியும் என்றும் டி.வி. நிகழ்ச்சியில் கூறி அதேபோல செய்கிறார். சமீபத்தில் History Tv-ல் Derren Brown-ன் நிகழ்ச்சியை நான் (அபு சனா) பார்த்தேன். அப்போது இவர் 300க்கும் மேற்பட்ட நபர்களை ஒரு அரங்கிற்குள் உட்கார வைத்து தான் ஒருவரை கட்டுப்படுத்தி தான் என்னென்ன நினைக்கிறேனோ அதை எல்லாவற்றையும் தன்னால் கட்டுப்படுத்தப்பட்ட நபரை செய்ய வைக்கிறேன் என்று கூறினார். இதற்கு பார்வையாளர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். அரங்கிற்குள் இருந்த பார்வையாளர்கள் தாங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டதற்கு பெருமகிழ்ச்சி கொண்டனர். அப்போது, Derren Brown ஒரு காட்சியை அகண்ட திரையில் காட்டினார். அதில் ஒரு குறிப்பிட்ட நபரை தான் கட்டுப்படுத்தப் போவதாகவும், இதற்கு பார்வையாளராக இருக்கக் கூடிய நீங்கள் உதவி புரிய வேண்டும் என்றும் கூறினார். பார்வையாளர்கள் தாங்கள் யார் என்று தெரியாமல் இருக்க முகமுடி அணிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறி அனைவரையும் முகமுடி அணிந்து கொண்டார். பிறகுதான் அந்த கேவலமான சம்பவம் நிகழ்ந்து. இதில் திரையில் தெரிந்த கட்டுப்பாட்டுக்குள்ளான அந்த நபர் Derren Brown நினைப்பது அனைத்தையும் செய்தார். அதாவது அவர் இப்போது மூக்கை சொறிவார் பாருங்கள், அவர் பாத்ரூம் செல்வார் பாருங்கள், பிறருடன் சண்டை போடுவார் பாருங்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக் கொண்டிருக்க அதேபோல திரையில் இருந்த அந்த குறிப்பிட்ட நபரும் செய்து கொண்டிருந்தார். பிறகு பார்வையாளர்களைப் பார்த்து நீங்கள் இந்த நபர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களே அதை வெளிப்படுத்துங்கள் என்று கேட்க அனைவரும் தயாரானார்கள். திரையில் தெரிந்த அந்த குறிப்பிட்ட நபர் இப்போது சண்டை போட வேண்டுமா அல்லது சமாதானமாக வேண்டுமா? என்று பார்வையாளர்களை பார்த்து கேள்வி கேட்டார். அதற்கு A அல்லது B ஆப்சனைத் தேர்ந்தெடுங்கள் என்றனர். அதிகமானோர் அவர் சண்டை போட வேண்டும் என்று 100ல் 70 சதவீதத்தினர் B ஆப்சனைத் தேர்ந்தெடுத்தனர். அந்த குறிப்பிட்ட நபரும் சண்டை போட்டார். அதேபோல திரையில் தெரிந்த அந்த குறிப்பிட்ட நபர் கடைக்குள் சென்று திருட வேண்டுமா அல்லது எடுக்கும் பொருளுக்கு காசு கொடுத்து வெளியேற வேண்டுமா என்று Derren Brown கேட்டார். அதற்கு பார்வையாளர்கள் திருட வேண்டும் என்று 100ல் 65 சதவீதத்தினர் வாக்களித்தனர். அந்த குறிப்பிட்ட நபரும் திருடினார். பிறகு அந்த குறிப்பிட்ட நபரை போலீஸ் கைது செய்ததும் அவர் தப்பித்து விட வேண்டுமா அல்லது அவர் அப்பாவி என்று தெரிந்து அவரை விடுதலை செய்ய வேண்டுமா என்று Derren Brown பார்வையாளர்களைப் பார்த்து கேட்டார். பார்வையாளர்களில் 80 சதவீதம் பேர் அவர் போலீஸிடமிருந்து தப்பித்து விட வேண்டும் என்று பதிலளித்தனர். அவ்வாறே அந்த குறிப்பிட்ட நபரும் போலீஸிடமிருந்து தப்பிக்கிறார். இவ்வாறு நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்க நிகழ்ச்சியை முடிக்கும் முன் Derren Brown போட்டாரே ஒரு போட பார்வையாளர்கள் அவமானப்பட்டு வெட்கித் தலை குனிந்தனர். இந்நிகழ்ச்சியில் குறிப்பிட்ட அந்த நபர் குற்றவாளி அல்ல நீங்கள்தான் குற்றவாளிகள் என்று பார்வையாளர்களைப் பார்த்து கூற பார்வையாளர்கள் அனைவரும் வெட்கித் தலை குனிந்தனர். மீண்டும் Derren Brown உங்களில் பலருக்கு கொடூரமான எண்ணங்கள் உள்ளத்தில் குடி கொண்டிருக்கிறது. நீங்கள் நன்மையான காரியங்களில் ஈடுபடாமல் தீமையான காரியங்களில்தான் அதிகம் ஈடுபடுகிறீர்கள் என்று இந்நிகழ்ச்சியில் மூலம் நன்றாகத் தெரிகிறது என்று கூறியதும் பார்வையாளர்கள் அவமானப்பட்டுப் போனார்கள். நான் (அபு சனா) ஏன் இதைப் பற்றி கூறுகிறேன் என்றால் அமெரிக்கர்களில் பலர் இந்த கொடூர மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்நிகழ்ச்சியில் மூலம் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டேன். பிறகு பன்றிக் கறி சாப்பிடும் இவர்கள் மூளை இவ்வாறு தானே செயல்படும்.
Posted on: Sat, 10 Aug 2013 07:49:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015