ராகுல் - மோடி ஒரு பார்வை - TopicsExpress



          

ராகுல் - மோடி ஒரு பார்வை இருவருக்கும் தாடி இருக்கும் . - குர்தா- பைஜாமாக்கள் உடுத்துபவர்கள். ராகுல் - மக்கள் மனதை புரிந்து கொண்டு கட்சியே தவறு செய்தாலும் - தன் கருத்தை (அவசரச்சட்டத்தில் ) தெளிவாக சொல்பவர் . நாடே தவறு என்று கூறினாலும் கோத்ரா போன்ற நிகழ்சிக்காக இன்னும் தவற்றை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்காதவர் மோடி. வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் பாலித்தீன் குடிசைகளில் வாழ்ந்து - பின்தங்கிய பண்ணை விதவை பற்றி பேசி - .தலித்களின் உரிமை பேசி - போஸ்கோ போன்ற பெரிய கம்பெனிகள் - மலை வாழ மக்களின் வாழ்கையை மாசு ஆக்காமல் இருக்க உதவி செய்பவர் ராகுல். முன்னாள் தேயிலை விற்பனையாளர் மோடி - அம்பானி போன்றவர்களால் போற்றப்படுபவர். டச்சு ரோஜாக்கள் பயிரிட விவசாயிகள் பற்றி ட்வீட் செய்பவர். மோடி விவசாய நிலங்களை மிக, மிக குறைந்த விலையில் டாடா போன்றவர்களுக்கு தாரை வார்ப்பவர். லோக் பால் - இந்திய தேர்தல் ஆணையம் போல -தனி தன்மையுடன் - அரசுக்கு அப்பால் இயங்க வேண்டும் என்பவர் ராகுல். சட்டபடி நியமிக்கப்பட்ட - குஜராத் உயர் நீதி மன்றத்தால் அங்கீகரிக்கபட்ட லோக் பால் தலைவரை -மக்கள் வரிபணத்தை ரூ. 50 கோடி வரை செலவழித்து செயல் பட விடாதவர் மோடி.
Posted on: Wed, 09 Oct 2013 08:27:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015