April 8 2012 அவளின் திருமணம் - TopicsExpress



          

April 8 2012 அவளின் திருமணம் நடந்த நாள். ஐயோ மன்னிக்கவும் இனி எனக்கு அவள், இவள் என்று சொல்ல தகுதி இல்லை. அவங்க பெயரை கூட நான் சொல்ல விரும்பவில்லை. மதுரையில் பிறந்த அந்த “பெண்” சென்னையில் வளர்ந்தாலும் மீண்டும் தன் வாழ்க்கையை சொந்த ஊரிலேயே தொடங்க ஆரம்பித்துவிட்டார். எந்த பெண்ணிடமும் பேசாதவன் நான். ஏனோ அவங்கள பார்த்தபின் ஒவ்வொரு நொடியும் பேச வேண்டும் என நினைத்தேன். 2 ஆண்டுகள் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும் அவங்களிடம் நான் பேச எடுத்து கொண்ட காலம் ஒரு ஆண்டுகள்……….. அவங்களுடன் பழகிய ஒவ்வொரு நாளும் வண்ணமயமாக இருந்தது. பிறவி பயனை அடைந்ததை போல் ஒரு சந்தோசம். என் அக்கா, தங்கைகளிடம் கூட அழகாக பேசினார்கள். மழலை பேச்சு, உண்மையான பாசம், சிதையாத சிரிப்பு இன்னும் சொல்லி கொண்டே போகலாம். என் வீட்டின் தீபாவளி பலகாரங்களை அவங்க வீட்டிற்க்கு குடுத்தேன். அந்த இனிப்புகளை விட அழகாக சிரித்து கொண்டே வாங்கி கொண்டார்கள். நாள் போக போக இன்னும் ஆழமாக குடும்பங்களை பற்றி பேச ஆரம்பித்தோம். நாங்கள் இருவரும் நன்றாக பேசுவதை பார்த்து உடன் வேலை செய்யும் சிலருக்கு சந்தேகம் வந்தது.., சிலர் என்னிடம் வந்து “என்னடா correct ஆயிடுச்சா?!…. ” என்று கேட்கவும் செய்தார்கள். அவர்களுக்கெல்லாம் என் வெட்கம் பதில் சொல்லி விட்டது. ஒரு நாள் அவங்களுக்கு வயிற்றில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக operation செய்து கொண்டு வேலைக்கு வரவில்லை. ஒரு கணம் துடித்து போன நான் office-ல் உடன் வேலை செய்யும் senior ஒருவருடன் அவங்க வீட்டிற்க்கு சென்றோம். எங்களுக்கு முன்பே office-ன் மகளிர் அனைவரும் அவங்களை நலம் விசாரித்து விட்டு திரும்பினார்கள். அந்த கூட்டத்தில் ஒருவர் என் வருகையை பார்த்து “Unbelieveable” என்று சொன்னதை இன்று வரை நினைக்கிறேன். கட்டிலில் படுத்து இருந்த அவங்க என்னை பார்த்த உடன் “பளிச்” எனும் புன்னகையை சிந்தினார்கள். நீ வருவேனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்கள். நான் வாங்கி வந்த salt bread & sweet bread இரண்டையும் குடுத்தேன். ஐயோ எனக்கு எதற்கு இதெல்லாம் என்று செல்லமாக கடிந்து கொண்டார்கள். பிறகு அவங்க அம்மா juice குடுத்தார்கள். என்னுடன் வந்த senior அவங்க அம்மாவிடம் பேசி கொண்டு இருந்தார்கள். கிளம்பும் போது என் கையை பிடித்து பார்த்து பத்திரமா போ…. என்றார்கள். எனக்குள் மின்சாரம் பாய்ந்தது. எப்படியோ அவங்க வீட்டிற்க்கு போய் வந்த சந்தோஷத்தில் ஏதோ ஒரு புது உலகத்தில் இருந்தேன். இரண்டு ஆண்டுகள் கழித்து நான் வேறு office-க்கு மாறினேன். அப்போதுதான் நான் mobile வாங்கினேன். அவங்களை விட்டு பிரிந்த சோகம் நிறையவே என்னை சுற்றி வந்தது. தினமும் அவங்க sms பார்த்துதான் கண் விழிப்பேன். saptiya , hi , gud mng , gud ni8 இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஆனால் அவங்களை விட்டு பிரிந்த பின் நான் இப்படி ஆகிவிட்டேன்….., வேண்டாம் அவங்களிடம் நம் காதலை சொல்ல வேண்டாம். அளவோடு பழக நினைத்தேன். அவங்களோ நான் office மாறிய நாளில் இருந்து msg & call மூலம் தொடர்பில் இருந்தார்கள். இதனால் மீண்டும் என் மனம் அவங்களை காதலிக்க தொடங்கியது. ஆனால் நான் அம்மா சொல்லும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்ற கொள்கையில் இருந்தேன். அந்த கொள்கையும் அவங்களை பார்த்த பின் கொஞ்சம் தடுமாறியது. எனக்கு தினமும் msg செய்து கொண்டே இருந்தார்கள். எனக்கு அம்மா சொல்லும் பெண் இவளாக இருக்க கூடதா ?…. என்று ஏங்கி தவித்தேன். அவங்க வீட்டில் sunday எப்போதும் non-veg செய்வார்கள். ஒரு sunday என்ன சமையல் என்று கேட்க அவங்க chicken pirayani என்று சொன்னார்கள். அதற்கு நான் விளையாட்டாக உங்க குடும்பமே குருவிகார குடும்பமா?.. என்று கேட்டுவிட்டேன். உடனே அவங்க என்னை பத்தி என்ன வேணும்னாலும் பேசிக்கோ…என் குடும்பத்த பத்தி எதுவும் பேசாதே ..என்றார்கள். முதன்முதலாக அவங்களிடம் நான் காயமடைந்த வார்த்தை..சொல்லிவிட்டு அவங்க தூங்க போய்விட்டார்கள். எனக்குத்தான் உறக்கம் வரவில்லை… நான் உங்க குடும்பத்தை பத்தி பேசியதற்கு sorry சொல்லிவிட்டு இனி நான் அப்படி நடந்து கொள்ளமாட்டேன். என்னிடம் உள்ள கெட்ட பழக்கம் நான் யாருடனாவது close-சாக பழகி விட்டால் அதிகமாக பேசி விடுவேன். அதுவும் எனக்கு பெண்களிடம் அதிகம் பழக்கம் கிடையாது. வல்லவன் படத்தில் நயன்தாரா சொன்ன மாதிரி எனக்கு பெண்களிடம் எப்படி behav பண்ண வேண்டும் என்று தெரியவில்லை.., so நான் இனி அளவோடு இருந்து கொள்கிறேன் என்று msg மூலம் சொன்னேன். அவங்க தூங்கி எழுந்து என் msg பார்த்து விட்டு super sir cinema dialouge எல்லாம் சூப்பர் என்று சொன்னார்கள். எனக்கு மேலும் மனசு வலித்தது. எனக்கு பதில் sms அனுப்ப விருப்பம் இல்லை. அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் எனக்கு gud mng sms send பண்ணங்க.., நான் reply பண்ணவில்லை. நான் ஏதாச்சும் உன்ன கஷ்டபடுத்தி இருந்த sorry என்று msg பண்ணங்க 11 மணியளவில் call செய்தார்கள் எனக்கு attend செய்ய மனமில்லை. மீண்டும் ஒருமுறை call செய்தார்கள் attend செய்யவில்லை . உடனே நான் ஒரு loose இப்படித்தான் ஏதாச்சும் பண்ணுவேன். நீங்க நல்ல பொண்ணு என்னால ஏன் உங்களுக்கு tension happy ah இருங்க என்று சொன்னேன். அதற்கு இல்லை sir I am the fool என்று reply பண்ணங்க.. இருந்தாலும் தினமும் forward msg செய்தார்கள். நான் கண்டுகொள்ளவில்லை ஒரு நாள் “enna sir forward msg kuda send panna mattengala ” -னு கேட்டார்கள். நான் கஷ்டமா இருக்கு என்னால பழயபடி இருக்க முடியல… என்று சொன்னேன். அதற்கு “ok sir hereafter I won’t disturb you ” னு சொன்னங்க….. ஆனால்., October 2 2010 அன்று மீண்டும் அவங்களிடம் இருந்து ஒரு forward msg அது love பத்தின msg உடனே நான் sorry உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அம்மா சொல்லும் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இருந்தேன். உங்களை பார்த்த பின் அந்த பெண் நீங்களா இருக்க கூடதா ? என்று ஏங்கியது உண்டு. இருந்தாலும் இன்று வரை உங்களை நான் love பண்றேன் என்று சொன்னேன். அதற்க்கு அவங்க என் மனசுல அப்படி ஒரு எண்ணம் இருந்தது இல்லை. நான் உன்னை friend ஆக நினைத்துதான் பழகினேன் என்று சொன்னங்க….. அந்த நிமிடம் என் இதயம் வெடித்து சிதறியது… அது எப்படி இந்த பெண்கள் மட்டும் காதலை ஒத்து கொள்ள மறுக்கிறார்கள்… அந்த இரவோடு முடித்து போன எங்க தொடர்பு மீண்டும் march 21 2011 ஆரம்பித்தது. 5 மாதங்கள் கழித்து எங்க அண்ணியின் aircel mobile problem காரணமாக பேசினோம். என் தங்கையும் அவங்களும் friends என்பதால் மேலும் அவங்க aircel user என்று ஏற்கனவே என் தங்கையிடம் சொல்லி இருந்தேன். என் அண்ணி என்னிடம் அவங்க உன்னுடன் work பண்றவங்கதானே கொஞ்சம் பேசி என்னோட mobile problem solve பண்ணுமாறு கேட்டார்கள். ஏதோ அண்ணி கேட்டுவிட்டர்களே என்பதற்காக அவங்களுக்கு கால் செய்தேன். call attend செய்யப்படவில்லை மீண்டும் முயற்சித்தேன் no response . என் நண்பனும் அதே office -ல் வேலை செய்வதால் அவனுக்கு call செய்து விஷயத்தை சொன்னேன். அவன் சொன்னவுடன் எனக்கு sorry நான் mobile silent mode -ல் வைத்திருதேன் என்று msg பண்ணாங்க. உடனே, நான் msg பார்த்ததும் call பண்ணேன். 5 மாதங்கள் கழித்து அந்த குரலை கேட்க எனக்கு ஒருவித வலி கொடுத்தது. நன்றாக பேசினார்கள், நலம் விசாரித்தார்கள், நானும் நலம் விசாரித்துவிட்டு love பண்றேன் என்று சொன்னதற்கு sorry கேட்டு கொண்டேன். அதற்க்கு அவங்க it ‘s ok நான் எதுவும் தப்பா நினைக்கல என்று சொன்னார்கள். என்னோட கெட்ட நேரம் பேசிக்கொண்டே இருக்கும் போது mobile switch off ஆகிவிட்டது. கடைசிவரை என் அண்ணி கேட்ட problem பத்தி பேசவில்லை. room க்கு போனதும் mobile charge போட்டு படுத்தேன். அதே office -ல் வேலை செய்யும் என் juniour room -ல் பேசி கொண்டு இருந்தேன். அப்போது charge ஏறி கொண்டு இருந்த என் mobile க்கு gud ni8 என்று ஒரு msg அவங்க கிட்ட இருந்து வந்தது. அப்போது மணி 11 : 00 PM என் juniour நண்பன் அந்த mag பார்த்து விட்டு “நீங்க மறுபடியும் பேச ஆரம்பித்து வீட்டீர்களா? ” என்று கேட்டான். நான் ஆம் என்று சொன்னேன். உடனே அவன் நீங்க call பண்ண உடனே அவங்க mobile எடுத்துகிட்டு office lunch hall -ல உட்கார்ந்து ரொம்ப ரொம்ப சந்தோசத்துல பேசுனாங்க… நான் அவங்க அவ்ளோ happy -யா பேசி இதற்க்கு முன் பார்த்ததில்லை என்றான். ஆனால், நான் அதை நம்பவில்லை என்றதும் வேணும் என்றால் call பண்ணி கேட்கலாம் என்றான். நானும் சரி என்று சொன்னேன். அவனும் call செய்து விட அவங்க call attend செய்து பேசினார்கள். அப்போது time 11 : 30 PM . என்ன அக்கா romba happy -யா இருக்கீங்க போல ? என்று கேட்டான். அதற்கு அவங்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா… எத வெச்சி அப்படி சொல்றே என்று கேட்டதற்கு இவன் அவர் call பண்ண அப்போ ரொம்ப நேரம் சந்தோசத்துல இருந்தீங்களே என்று சொல்லும் போதே அவங்க அம்மா ஏதோ அங்கு சத்தம் போட்டார்கள். call cut ஆகிவிட்டது.., எனக்கும் அவனுக்கும் வியர்க்க ஆரம்பித்து விட்டது. கொஞ்ச நேரத்தில் அவங்க call செய்தார்கள். என் juniour call attend செய்தான். அவங்க அம்மா பேசினாங்க.., என்னப்பா இந்த நேரத்துல call என்று கேட்டதற்கு அவன் என் aircel problem அதன் கேட்டேன் என்று சொன்னான். உடனே அவங்களும் call cut பண்ணிவிட்டார்கள். ஆனால் அங்கு ஏதோ problem என்று மட்டும் நன்றாக தெரிந்தது. என் juniour அடுத்த நாள் காலை office போனதும் என்ன நடந்தது என்று கேட்டு சொல்கிறேன் என்று சொன்னான். அடுத்த நாள் காலை நீண்ட நேரம் ஆகியும் அவன் எனக்கு call செய்யவில்லை. உடனே நான் அவனுக்கு call செய்து கேட்டேன். அவன் wait பண்ணுங்க அவங்க காலையில இருந்தே முறைக்கிறார்கள். சரியாக பேசவில்லை என்றான். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக எனக்கு தலை வெடித்து விடும் போல் இருந்தது. உடனே நானே அவங்களுக்கு call செய்தேன். but not attend , msg பண்ணேன் no reply … உடனே என் நண்பனுக்கு போன் செய்து அவங்களிடம் குடுக்குமாறு சொன்னேன். அவனும் குடுத்தான். என்னை மிகவும் சத்தம் போட்டார்கள். தவறு என் பக்கம் இருப்பதால் அமைதியாக கேட்டுக்கொண்டேன். அவன் யாருடா?.. உன் mobile -ல இருந்து எனக்கு call பண்ண.. என்ன பத்தி என்னடா சொல்லி வெச்சிருக்க உன் room -ல என்று கேட்டார்கள். நீங்க ரொம்ப happy -யா இருந்திங்கலாம் அதான் நான் call பண்ண சொன்னேன் என்று சொன்னதும் அவங்க நெருப்பாய் எறிந்தார்கள்.. Oh …..sir அப்ப நீங்க கூடதான் இருந்தீங்களா?!… ரொம்ப சந்தோசம் !… நான் என்னவோ உனக்கு தெரியாமதான் நடந்ததோனு நெனச்சேன்.. டேய்!.. நானும் என் அம்மாவும் எவ்ளோ friends ah இருப்போம்னு உனக்கு நல்ல தெரியும்தானே!.. அந்த அம்மாவே நேத்து night -ல இருந்து என்கிட்டே சரியாய் பேசல, எங்க வீட்ல relatives எல்லாம் வந்து இருக்காங்க!.. எல்லாரும் நேத்து night ஒரு மாதிரியா பார்த்தாங்க..உன் தங்கச்சிக்கு night 11 : 30 க்கு call வந்தா உங்க வீட்ல சும்மா இருப்பாங்களா?… என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவங்க கோபத்தை தீர்த்து கொண்டார்கள். என்னால் எல்லாத்துக்கும் sorry தான் கேட்க முடிஞ்சது.. ஆனால் அந்த sorry -யை நீயே வெச்சிக்கோ என்று ஆத்திரத்தில் கத்தினார்கள். உன்ன எங்க வீட்ல எவ்ளோ நல்லவன்னு நெனச்சாங்க… என்னை மன்னிச்சிடுங்க இனி lifelong உங்கள நான் disturb பண்ண மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் நான் சொல்லும் எதையும் அவங்க கேட்பதாக தெரியவில்லை.. இது வரை அவங்க ஆத்திரத்தில் பேசிய எல்லா வார்த்தைகளையும் நாம் தவறு செய்து விட்டோம் என்ற அடிப்படையில் ஒத்து கொண்டேன். கடைசியாக “எந்த பொண்ணு கிட்டயும் பேசாதவன், ஏதோ நம்மிடமாவது பேசுறானே!.. பேசி தொலையட்டும் என்று விட்டேன்… ஆனால் அதற்கு நல்ல பரிசு கொடுதுட்ட…” என்றார்கள்.. அவங்க பேசிய இந்த வார்த்தையை கேட்டு அந்த நிமிடமே இறந்து விட வேண்டும் போல் இருந்தது. நான் சற்றும் எதிர் பார்க்காத வார்த்தை.., பல பேர் கூடி இருக்கும் இடத்தில் செருப்பால் அடித்தார் போல் இருந்தது.. இதற்க்கு மேல் எனக்கு பேச தைரியம் இல்லை.. இனி உங்களை தொல்லை படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டு call cut செய்து விட்டேன்., முதன் முதலாக என்னை மீறி நான் அழுது எனக்குள்ளே நொந்து போனேன். காதலில் அழுகை மிகவும் கொடுமையானது என்று அன்று தெரிந்து கொண்டேன். அந்த இரவு என்னை மரண படுக்கையில் தள்ளி விட்டது. என் தலையில் அடித்து கொண்டு அழுதேன். “எந்த பொண்ணு கிட்டயும் பேசாதவன், ஏதோ நம்மிடமாவது பேசுறானே!.. பேசி தொலையட்டும்…..” இந்த வார்த்தைகள் இன்று வரை என்னை சுற்றி ஒலித்து கொண்டே இருக்கின்றன.. March 22 2011 அவங்க என்னிடம் கடைசியாக பேசியது. நான் எந்த பெண்ணும் கிடைக்காமல் அவங்களிடம் பழகவில்லை. ஆனால் என்னை ஒரு பிச்சைகாரனை போல் இவ்வளவு அசிங்க படுத்துவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவங்களுக்கு health problem என்று தெரிந்த உடன் 2 முறை அவங்க வீட்டிற்க்கு சென்று பார்த்தேன். நான் வேண்டாம் என்று சொன்ன போதும் அவங்களாகவே msg பண்ணி Gud MNG , Saptiya , என்னை கை பிடித்து பத்திரமா போ என்றது, இதெற்கெல்லாம் என்ன பெயர்?… எனக்குள்ளே கேட்டு கொண்டேன். நான் அவங்களுடன் பழகிய வரை உண்மையாகவே பழகினேன். ஆனால் அவங்க “பேசி தொலையட்டும்” என்ற எண்ணத்தில் என்னிடம் பழகி இருப்பது அவங்க வாயாலேயே தெரிந்து கொண்டேன். என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை. கோபம் எல்லோருக்கும் இயற்கையானதுதான், ஆனால் அந்த கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. நான் serious ஆக பேசினாலும் cinema dialouge பேசுகிறவன் என்னும் போதே நான் சுதாரித்து இருக்க வேண்டும்…. எப்படியோ இனி என்னால் அவங்களுக்கு தொல்லை இருக்க கூடாது. எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டேன். நான் மீண்டும் அவங்களை தொல்லைப்படுத்த போவதில்லை. ஆனால் அவங்க கடைசியாக சொன்ன அந்த ஒரு வார்த்தை போதும் என்னை ஆயுளுக்கும் கொஞ்ச கொஞ்சமாய் கொல்ல!.. எப்படியோ என் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தது. ஒரு நாள் என் தம்பியை பார்க்க இராயபேட்டை hospital poga 12G bus -ல் போய் கொண்டிருந்தேன். திடீரென்று நான் தடுமாறி போனேன் என்னை அந்த bus conductor மற்றும் சுற்றி நின்ற பலரும் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். நான் அப்படி செய்ததற்கு காரணம்…, நான் அவங்களை அந்த bus stop -ல் பார்த்தேன். பார்த்த அந்த second ஏதோ எனக்குள் என்னை அறியாமல் ஒரு நிலநடுக்கம். இறங்கி போய் பேச நினைத்தேன்.., ஆனால் என் மனம் ”எந்த பொண்ணு கிட்டயும் பேசாதவன், ஏதோ நம்மிடமாவது பேசுறானே!.. பேசி தொலையட்டும்…..” இந்த வார்த்தையை ஞாபகபடுத்தியது… இருந்தாலும் அன்று நான் எதையோ தொலைத்த மாதிரி ஒரு Feel … என் வாழ்க்கையில் இவங்ககிட்ட இருந்து சில விஷயம் கற்று கொண்டேன். என்னால் ஒரு இரவு அந்த 11 : 30 PM நேரத்தில் call வந்ததால் அவங்களுக்கு அவங்க அம்மா மற்றும் relation கூட யார் இந்த நேரத்தில் என்ற கேள்விக்கு ஆளாகிவிட்டார்கள். ஆனால் அந்த கேள்வியால் அவங்களுக்கு ஏற்பட்ட மனகஷ்டம் கொஞ்ச நாளில் மறைந்து போக கூடும். ஆனால் அதற்க்கு காரணமான என்னை “எந்த பொண்ணு கிட்டயும் பேசாதவன், ஏதோ நம்மிடமாவது பேசுறானே!.. பேசி தொலையட்டும்…..” என்று வார்த்தையால் கொன்றதை என் மரணம் வரை என்னுடன் வாழும். கோபத்தில் அவங்க பேசியதை அவங்களே மறந்திருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளை வாங்கிய நான் மறக்க நினைத்தாலும் முடியவில்லையே!…. வாழ்க்கையின் ஓட்டத்தில் நானும் ஓடி கொண்டு இருக்க என் தோழி ஒருவரின் மூலம் கடந்த April 8 , 2012 அவர்களின் திருமணம் என்று கேள்வி பட்டேன். என்னையும் Invite பண்ணுவாங்களா?.. என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் தினமும் வாழ்ந்து கொண்டு இருந்தேன். அந்த நம்பிக்கை நாசமாய் போனது. Anyway எங்கு இருந்தாலும் வாழ்க வளமுடன்!… என்னால் காதலிக்கப்பட்டவள் நன்றாக வாழ கடவுளிடம் வேண்டுகிறேன். April 08 காலையில் 8 மணி அளவில் என் அண்ணனிடம் இருந்து call ….. 4 நாள் முன்னாடி பிறந்த குழந்தைக்கு இந்த பெயர்தான் வைக்க போகிறேன் என்று சொன்னார். எனக்கு அந்த பெயரை கேட்டதும் தூக்கி வாரி போட்டது. காரணம், என்னுடைய அவங்க பெயரைத்தான் என் அண்ணன் தன் குழந்தைக்கு வைத்துள்ளார். ஏற்கனவே என் அண்ணியிடம் அந்த பெயரை என் குழந்தைக்கு வைக்க போவதாக சொல்லி இருந்தேன். ஆனால் என் அண்ணன் ஆசை பட்டு கேட்க நான் OK சொல்லி விட்டேன். அவங்களை இனி நான் நினைத்து வாழ்ந்தால் நான் ஒரு கீழ்த்தரமானவன். அடுத்தவன் மனைவிக்கு ஆசைபடுவது தவறு என்று எனக்கு தெரியும். ஆனால் என் பழைய நினைவுகளுக்கு தெரிய வேண்டுமே?… மாறிவிடுவேன்.. என் மனதையும் மாற்றி கொள்வேன்!… பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!… வாழ்க வளமுடன்!..
Posted on: Sat, 21 Sep 2013 16:46:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015