Sanction of funds for infrastructure development of Veterinary - TopicsExpress



          

Sanction of funds for infrastructure development of Veterinary Hospitals/ அரசு செய்தி குறிப்பு (03/10/2013): “பாலை பொழிந்து தரும் பாப்பா - அந்த பசுமிக நல்லதடி பாப்பா” என்றும், அண்டிப் பிழைக்கும் நம்மை, ஆடு - இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா என்றும் கால்நடைகளின் பெருமையைப் பற்றி பாடினார் மகாகவி பாரதியார். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்குவது கிராமங்கள். கிராமங்கள் தான் நம் நாட்டின் உயிர் நாடி என்பதன் அடிப்படையில், கிராம மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திடும் வகையில் இரண்டாம் பசுமை புரட்சியை உருவாக்குவதற்கும், வெண்மைப் புரட்சி ஏற்படுத்தப்படுவதற்கும் தேவையான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. கால்நடைகளின் சிறந்த பராமரிப்புக்காக புதியதாக கால்நடை மருந்தகங்கள் தொடங்குதல், கால்நடைகளுக்கு நவீன மருத்துவ சிகிச்சை அளித்தல், கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்குதல், தீவனப் பெருக்கம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. கறவைப் பசுக்களின் பால் உற்பத்தித் திறனை அதிகரிக்க சிறந்த வம்சாவழி மரபணுக்கள் கொண்ட காளைகளில் இருந்து உயர்தர உறைவிந்து உற்பத்தியை உறுதி செய்வதற்காக உதகமண்டலத்தில் உறைவிந்து உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தின் உறைவிந்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், வலுப்படுத்தவதற்கு ஏற்ற வகையிலும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 6 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கால்நடைகளுக்கு போதிய உலர் தீவனம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். உலர் தீவனத்தை விவசாயிகளுக்கு வழங்க 250 மானிய உலர் தீவன விற்பனை நிலையங்களை அமைக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஒரு விற்பனை நிலையத்திற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னுரிமை அளித்து வருகிறார். எனவே, கிராமங்களில் உள்ள 100 கால்நடை கிளை நிலையங்களை நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 6 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் கால்நடை பராமரிப்புத் துறைக்கென 25 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
Posted on: Thu, 03 Oct 2013 07:37:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015