Thirumurugan Gandhi இனப்படுகொலை - TopicsExpress



          

Thirumurugan Gandhi இனப்படுகொலை வருடம் 2009க்கு பின்னரான அரசியலில் சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலை நாம் சரியான முறையில் எதிர்த்து களமாடவில்லை என்பதுவே உண்மை. நாம் நம்மை , நமது போராட்ட வழி முறைகளையும், எதிரி நண்பர் யார் என்கிற புரிதலையும் மறு ஆய்வு செய்தாக வே...ண்டி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும் . அமெரிக்க தீர்மானத்தினை ஆதரிப்பவரும் /ஆதரித்தவரும் , 13வது சட்ட திருத்தம் - மாகாண தேர்தல் குறித்தான நிலைப்பாடும் / போராட்டமும் எடுக்க முடியாமல் நிற்பவர்களும் நவி பிள்ளை முன்வைக்கும் / அடிக்கோடிடும் அரசியல் தீர்விற்கான கருத்தாக்கத்திற்கு பதில் சொல்லவேண்டி காலம் இது. விடுதலையை நோக்கி குறிப்புடன் நகரவேண்டிய போராட்ட களத்தினை அமைக்கவில்லை நாம். இது தொடரும் பட்சத்தில் சர்வதேச விவாதத்தில் தோல்வியை நோக்கியே நாம் நகர்கிறோம் என்பதை உணரவேண்டும் . 2011இல் நாங்கள் உலகின் நிகழ்ச்சி நிரல் "இலங்கையில் ஆட்சி மற்றம்" "ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு", "இனப்படுகொலை அல்ல இது ; இருதரப்பும் செய்த போர்க்குற்றம் என்று முடிக்கும்" என மேற்குலக நிகழ்ச்சி நிரலை முன்வைத்தோம். இதனடிப்படையிலேயே ஐ. நாவின் அலுவலக முற்றுகை முன்வைக்கப் பட்டது. இதன் நுணுக்க அரசியல் உள்வாங்கப்படவில்லை . பெட்ரியின் ஐ. நா உள்ளக விசாரணை அறிக்கை, நான்கு நாட்களுக்கு முன் நாங்கள் அம்பலப்படுத்திய சிங்கள மயமாக்கலுக்கான ஆதாரம் என எவையும் விவாதமாக்கப்படவில்லை. அறிவு சீவிகள் ஆரம்பித்து பெரும்பாலானவர்கள் கடைபிடித்த மெளனம் நேர்மையற்றது என்கிற ஆதங்கமே மேலிடுகிறது... 2009இல் நம்மை தோல்வி அடையவைத்த அரசியல் நிலையே இன்றும் இருக்கிறது என்பதே நிதர்சனம்... இனப்படுகொலை நடந்த போதும் "போராளிகள் " அரசியல் கோரிக்கையில் சமரசம் செய்யவில்லை.; ஆனால் இன்று நமது மெளனம் அதை சாதிக்கும். "I welcome the forthcoming elections to the Northern Provincial Council and hope they will proceed in a peaceful, free and fair environment, and usher in an important new stage in the devolution of power." navi-pillay https://colombotelegraph/index.php/full-speech-un-high-commissioner-for-human-rights-navi-pillay-at-the-press-conference-on-her-mission-to-sri-lanka/
Posted on: Tue, 03 Sep 2013 14:02:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015