Via aanthaireporter கோமா நோயாளிகள் - TopicsExpress



          

Via aanthaireporter கோமா நோயாளிகள் கண் கருவிழி மூலம் தகவல் பரிமாற்றிக் கொள்ள முடியும்! தற்போதைய சூழ் நிலையில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்–தகுதியானவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா என்ற தகவல் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜெயலலிதாவுக்கு 86 மதிப்பெண்களும், நரேந்திரமோடிக்கு 81 மதிப்பெண்களும், ராகுல்காந்திக்கு 53 மதிப்பெண்களும் கிடைத்துள்ளன.மேற்கண்டவாறு கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியரும், துபாயில் மூத்த மனிதவளமேம்பாடு மற்றும் நிர்வாக ஆலோசகருமான பொன் முகைதீன் பிச்சை, இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பது தொடர்பாக வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் இ–மெயில் மற்றும் தொலைபேசி மூலம் கருத்து கணிப்பு நடத்தினார்.வளைகுடா நாடுகளான சவுதி, கத்தார், ஓமன், பக்ரைன், குவைத் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த மேலாளர்கள், என்ஜினீயர்கள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பிரதமர் பதவிக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும், குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியும் பொருத்தமானவர்கள்; தகுதியானவர்கள் ஆவர். மற்ற தலைவர்களை விட இவர்கள் இருவரும் பிரதமர் பதவிக்கு சிறந்தவர்கள். நாட்டின் தலைமை பொறுப்புக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு இவர்கள் சிறந்த மாற்றாக இருப்பார்கள்.பிரதமர் மன்மோகன்சிங்கை விட நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் நரேந்திரமோடிக்கு உண்டு. பொருளாதார நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் திறமை மிக்கவர். மத்தியில் நல்ல நிர்வாகத்தை அவரால் கொடுக்க முடியும் என்று தெரிய வருகிறதாம்.. மேலும் இன்றைய சூழலில் நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், குடிநீர், எரிசக்தி ஆகியவற்றை மேம்படுத்த வேண்டுமானால் கண்டிப்பாக அன்னிய நேரடி முதலீடு அவசியம். அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு மத்தியில் திறமையான நிர்வாகம் தேவை.ஆட்சியில் பொறுப்பு உணர்வு வேண்டும். திறமையான நிர்வாகத்தையும், ஆட்சியில் பொறுப்புணர்வையும் அளிக்கும் ஆற்றல் ஜெயலலிதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் இருக்கிறது. இன்னும் கூடுதலாக ஜெயலலிதா மனத்துணிவும், தீர்க்கமான உறுதியும் கொண்டவர் ஆவார்.அது மட்டுமின்றி எப்படி லீ குவான் யூ சிங்கப்பூர் பற்றி தொலைநோக்கு சிந்தனைகொண்டிருந்தாரோ அத்தகைய தொலைநோக்கு பார்வை ஜெயலலிதாவிடமும் இருக்கிறது என்று பல என். ஆர். ஐ.க்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதாக தெரிகிறது. ஜெயலலிதா 2011–ம் ஆண்டு தமிழகத்தின் முதல்–அமைச்சராக 2011–ம் ஆண்டு பொறுப்பேற்றபோது, இந்தியாவில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை உருவாக்கினார். அவரது 2013 தொலைநோக்கு, மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியை 11 சதவீதமாக உயர்த்துவது என்று இருந்தது. பொதுவாக தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடிக்கும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான நல்ல பொருளாதார அறிவு இருக்கிறது. இருவருக்கும் நீண்டகாலம் முதல்–அமைச்சராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. நரேந்திரமோடியை பொருத்தமட்டில் சாதி சாரா தலைவராக இருக்கிறார். மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திறமை மிக்கவர். நிர்வாகத்திறன் படைத்தவர். அதேநேரத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சில தனித்துவ பண்புகள் கொண்டவர். நிர்வாகத்திறமை, சமூக பிரச்சினைகள் பற்றிய தெளிவு, சிக்கலான விஷயங்களைய உடனே புரிந்துகொள்ளும் அறிவாற்றல் மிக்கவர். ராஜ்ஜியத்திறன், சமூக, பொருளாதார அறிவு, பன்மொழி புலமை. முடிவு எடுக்கும் திறன், புதுமைசிந்தனை, நல்ல கல்விபுலமை, அரசியல் திறமைகள், மக்களின் நலன்பால் உள்ள அக்கறை. இவை எல்லாம் ஜெயலலிதாவின் தனிச்சிறப்புகள் ஆகும் என்று தெரிய வருவதாக முகைதீன் பிச்சை தெரிவித்துள்ளார். NRIs prefer Jayalalithaa as PM, not Narendra Modi or Rahul Gandhi. ********************************************************************************** Tamil Nadu chief minister J. Jayalalithaa seems to ha­ve a huge fan following am­ong non-resident India­ns­ (NRIs). A recent survey among NRIs says they consider her better qualified than Nare­ndra Modi and Rahul Gan­dhi to become the Indian Prime Minister.The survey conducted among 500 NRIs from the Gulf Cooperation Council, Australia, Canada, UK, Singapore, Malaysia, Sri Lanka, Thailand and India, rated Jayalalithaa the best for the job in terms of her leadership, governance and accountability , according to Pon Mohaideen Pitchai, an NRI and HR consultant in Dubai.
Posted on: Sun, 11 Aug 2013 05:01:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015