yapan HOME ABOUT POSTS RSS CONTACT LOG IN Friday, - TopicsExpress



          

yapan HOME ABOUT POSTS RSS CONTACT LOG IN Friday, November 22, 2013 தரிசனம் .....! மாதுரை பகுதி காப்பீட்டு உழியர் சங்கத்தின் எடுபிடிகளில்நானும் ஒருவன் ! அகில இந்திய தலைவர்கள் வரும் பொழுது அவர்களின் சொந்த தேவைகளை கவனிக்கும் பொறுப்ப்பை சங்கத்தலைமை எனக்குத்தரும்! மிகவும் விருப்பத்தோடு அதனைச்செய்வேன் ! அந்த மாபெரும் தலைவர்கள் தனிமையில் விகசிக்கும் மாண்பைப் பார்ப்பதில் எனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம் ! ஒருமுறை சரோஜ் சவுத்திரி அவர்கள் வந்திருந்தார்கள்.அவர்களை ரயில் நிலையத்திலிருந்து தங்கும்விடுதி அழைத்து திருப்பி அனுப்பும் வரை பொறுப்பு கட்டியிருந்தார்கள் ! மதுரைமேற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் விடுதி ! காலைசிற்றுண்டி அருமையாக ஏற்பட்டு செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ! com ! morning breakfast ? one idli and a cup of milk என்றார் என் முகத்தில் தோன்றிய அதிருப்தியை புரிந்து கொண்டவர் போல பேசினார் ! நான் விருந்து சாப்பிட்டு வயிற்று வலியில் படுக்க வரவில்லை ! நூற்றுக்கணக்கான தோழர்களை சந்திக்க வந்திருக்கிறேன் ! necserily i will restrict my diet என்றார் ! இட்லி வந்தது ! பிய்த்து பாலில் முக்கி சாப்பிட்டார் ! மதிய உணவிற்கு அழைத்துச் சென்றேன் ! விடு \தியை விட்டு இறங்கினோம் ! வாசலில் ஒரு வயதான பெண் பாபு பாபு அவரை நச்சரித்தார் ! அந்த பிசைக்கரியை விரட்டி விட்டு அவரை டவுண் ஹால் ரோட்டில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றேன் ! அந்தக் கிழவி விடவில்லை ! துரத்திக் கொண்டே வந்தார் ! நாங்கள் உணவு விடுதிக்குள் சென்று விட்டோம் ! அரைமணி நேரமாவது ஆகியிருக்கும் ! வெளியே வந்தோம் ! காத்திருந்த அந்தக் கிழவி மீண்டும் சரோஜினை நச்சரிக்க ஆரம்பித்தாள் ! எனக்கு கோபம் வந்தது ! ச்சீ ! நாயே வழிய விடு ! என்று அதட்டினேன் ! இரண்டு அடி முன்னே சென்ற சரோஜ் திரும்பினார் ! எங்கள் அருகில் வந்தார் ! தன் ஜிப்பா பாக்கட்டில் கைவிட்டு துழாவினர் ! ஒரு ரூ பாய் நாணயத்தை எடுத்து அந்தக் கிழவியின் தட்டில் போட்டா ர் ! அவர் பின்னால் நடந்த என் தோளில் கையைப் போட்டு it is not her mistake comrade ! என்றார் ! அவர் கண்களைப் பார்த்தேன் ! கலங்கி இருந்தது ! அந்த முகத்தில் மார்க்சை,எங்கல்சை,லெனினை ,ஸ்டாலினை,மாவோவை ,இ.எம் எஸ்ஸை தரிசித்தேன் !!!
Posted on: Sat, 23 Nov 2013 07:30:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015