அகதி தமிழரும் அலங்கோல - TopicsExpress



          

அகதி தமிழரும் அலங்கோல அரசியலும் வடமாகாண தேர்தல் காலத்தில் ,அடிக்கடி அவுஸ்ரேலிய அரசும் ,அமெரிக்க கனடிய அரசும்,ஐரோப்பிய அரசும் தங்கள் அங்கத்தவர்களை அனுப்பி Bishop Thomas Savundaranayagam அவர்களை சந்தித்து தேர்தலை பற்றியும் ,தமிழ் மக்களை பற்றியும் அக்கறை உள்ளவர்கள் என்று காட்டியதோடு மாடும் அல்லாமல் Thomas Savundaranayagam ஒரு முக்கிய புள்ளி என்று தமிழர்களை நினைக்க வைத்து ஏமாற்றி அதோடு கூட நாவிபிள்ளை அவர்களையும் அழைத்து கூட்டமைபிட்க்கு கூட்டாக பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றுக்கொடுத்ததில் ஒரு ரகசியம் இருப்பதை தமிழர்கள் புரிந்துகொள்ளவில்லை . அவுஸ்ரேலியாவிலும்,ஐரோப்பாவிலும்,அமரிக்க,கனடா போன்ற நாடுகளில் -குறிப்பாக அவுஸ்ரேலிய கிறிஸ்மஸ் தீவை எப்படி மூடுவது அல்லது அகதிகளை குறைப்பது ,இந்தப்பிரச்சனை அவர்களுடைய உள்நாட்டு அரசியலில் பதவிகளை ராஜினாமா செய்யும் அளவிற்க்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றது . கிட்டத்தட்ட 1.5 லட்சம் தமிழர்கள் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட நிலையிலும் ,நிரந்தரவதிவிட அந்தஸ்து அல்லாமலும் மேல்குறிப்பிட்ட நாடுகளில் வசிக்கின்றனர் . மேல்குறிப்பிட்ட நாடுகள் திருமதி .நாவிப்பிள்ளையுடன் நடத்திய மந்திர ஆலோசனையின் பிரகாரம் வடக்கில் கூட்டமைப்பு வெற்றிகொள்ளும் பட்சத்தில் இவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் . ஆகவே மொத்தத்தில் தமிழர்கள்மேல் அனுதாபம் போல் காட்டிக்கொண்டு தங்களுடைய நலனில் வழமை போல் கவனம் செலுத்தும் மேல்குறிப்பிட்ட நாடுகள் தமிழர்களை ஏமாற்றி விட்டது. அவர்கள் மட்டும் அல்ல தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில் கூட்டமைப்பு ,தங்களுடைய சட்டை பையை நிறைபதட்கு போட்டி போடுவதை மக்கள் உணர்ந்து கொண்டனர். ஆக மொத்தத்தில் தமிழர்கள் தமிழர்களால் வழமை போல் தோற்க்கடிக்க பட்டு விட்டனர்.
Posted on: Sun, 06 Oct 2013 21:47:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015