அவசரச் சட்டத்தை தடுத்த - TopicsExpress



          

அவசரச் சட்டத்தை தடுத்த பெருமை ஜனாதிபதிக்கே உண்டு: அத்வானி பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இணையதளபக்கத்தில் அவசரக் கூட்டம் பற்றிய தன் கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்கள் பதவியை காப்பாற்ற அவசரச் சட்டம் கொண்டு வந்த விஷயத்தில் சோனியா மிக சிறப்பான நாடகத்தை நடத்தியுள்ளார். இந்த நாடகத்துக்காக அவர் ராகுலை முன் நிறுத்தினார். ஆனால் ராகுல் மிகவும் துணிச்சலாக செயல்படுபவர் போல ‘‘முட்டாள் தனம்’’ என்ற வார்த்தையை பயன் படுத்தினார். இப்படி அநாகரீகமாக பேசியதன் மூலம் அவர் பிரதமரை மட்டுமல்ல ஐக்கிய முற்போக்கு கூட்டணியையே அவமரியாதை செய்துள்ளார். ராகுல் கொந்தளித்து விட்டதால் அவசரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்று விட்டதாக தகவலை பரப்பியுள்ளனர். இதுதான் இந்த நாடகத்தின் உச்சக்கட்ட காமெடியாக உள்ளது. உண்மையில் இந்த அவசரச் சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பா.ஜ.க. மனு கொடுத்தது. ஜனாதிபதியும் அவசரச் சட்டத்தில் உள்ள அவசரம், நோக்கத்தை புரிந்து கொண்டார். ஊழல் அரசியல்வாதிகளை தப்ப வைக்கவே இந்த அவசரச் சட்டம் பயன்படும் என்பதை ஜனாதிபதி புரிந்து கொண்டார். எனவேதான் அவர் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்காமல் விளக்கம் தருமாறு கேட்டார். மத்திய அரசால் ஜனாதிபதிக்கு உரிய விளக்கம் கொடுக்க முடியவில்லை. அதற்கு பதில் ராகுலை பேச வைத்து நாடகம் நடத்தி விட்டனர். உண்மையில் ராகுலுக்கு மக்கள் மன உணர்வும் புரியாது. அவசரச் சட்டத்தின் ஆழமும் தெரியாது. எனவே அவசரச் சட்டத்தை தடுத்து நிறுத்திய பெருமை ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. உண்மை நிலை இவ்வாறு இருக்க சில பத்திரிகைகளில் ராகுலுக்கு வெற்றி என்று எழுதியுள்ளனர். 26–ந்தேதி மந்திரிசபையில் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டதும் பா.ஜ.க. எதிர்த்தது. ஜனாதிபதி மாளிகைக்கு என் தலைமையில் சென்று 4 பக்க மனு கொடுத்தோம். அப்போதெல்லாம் இந்த ராகுல் எங்கே போனார்? என்ன செய்து கொண்டிருந்தார்? அவசரச் சட்டம் பற்றி யாரிடமும் அவர் விவாதிக்க கூடவில்லையே. அவசரச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கண்டுபிடித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அதில் கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்ப முடிவு செய்திருந்தார். இது அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என்பதால் சோனியா திட்டமிட்டு குட்டியை ஆடவிட்டு நாடகம் நடத்தி விட்டார். ஆனால் அவசரச் சட்டத்தை தடுத்தவர் ஜனாதி பதிதான். அவருக்குத்தான் இதில் வெற்றி கிடைத்துள்ளது. அவர் ரப்பர்–ஸ்டாம்பு ஜனாதிபதி அல்ல என்பதை நிரூபித்துள்ளார். இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.
Posted on: Fri, 04 Oct 2013 09:39:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015