அவள் ஒரு கிராமத்து - TopicsExpress



          

அவள் ஒரு கிராமத்து அம்மா... நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்.என்னிடம் வந்தாள்..." ஆத்தா இத எப்படி பேசுவது.? சொல்லித் தறியா...? கையில் புதிய போன்" நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.....சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்.... அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு பெருமிதம், அந்த அம்மா முகத்தில்... என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்.மாசம் ஒரு தடவை பேசுவான். இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு..? பேசவே இல்லை. அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு பாரும்மா...?" என்றாள். நான் பார்த்தேன்,அந்த பையன் call பண்ணவே இல்லை. நான் சொன்னேன் ஒரு தடவை call பண்ணி இருக்காங்க. நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப அமுக்கிடிங்க போல் " அப்டி என்று பொய் சொன்னேன்... அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்.சாப்டீங்களா அம்மா என்று கேட்டேன்.... எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ..? எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல.... நான் சொன்னேன், நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது என்னோட ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன். அந்த தாய் அழுது விட்டாள், அப்டியா ஆத்தா சொல்ற இனிமேலே சாப்டறேன். எனக்கு அழுகை வந்து விட்டது.... வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும் சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள். அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்... அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்...!
Posted on: Fri, 19 Jul 2013 06:24:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015