ஈரோட்டு - TopicsExpress



          

ஈரோட்டு பூகம்பம் தமிழ்நாட்டில் இராமனுக்கு கிடைத்த மரியாதை இந்து கடவுள் எவருக்கும் இதுவரைக்கும் கிடைத்ததில்லை ஆம் தந்தை பெரியார் இராமனை செருபால் அடித்து விரட்டினார் அவரின் சீடர் அன்னை மணியம்மையார் இராமனை கொளுத்திக்காட்டினார் புராணகதைகளில் தமிழனை திராவிடனை இழிவுபடுத்தும் நிலையை கண்டிப்பதோடு இல்லாமல் பெரும் போராட்டம் ஒன்றையும் நடத்தினார் ஆசிய கண்டத்திலேயே எந்த ஒரு பெண் தலைவரும் செய்யாத ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்திக்காட்டினார் அன்னை மணியம்மையார் ஒழிந்தார் பெரியார் என்று நினைத்த பார்ப்பனியத்திற்க்கு ஒரு பெரும் சவுக்கடியை கொடுத்தார் அன்னை மணியமையார் பெரியார் என்ற ஒரு உடல் மட்டும்தான் செத்து போனது ஆனால் அவரின் கொள்கை என்றும் வீரு நடை போடும் என்பதை நிறுபித்துக்காட்டினார் 1973 டிசம்பர் 8, 9-இல் சென்னையில் நடைபெற்ற தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் ஜாதியை ஒழிக்கப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார் தந்தை பெரியார். அதற்காக பல திட்டங்களைத் தனது கைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார்கள். அந்தக் குறிப்பேட்டின் பக்கத்தில் எழுதிய திட்டங்களில் ஒன்றுதான் இராவண லீலா எரிப்புப் போராட்டம். அந்தக் குறிப்பேட்டில் இராவணன் என்ற தமிழனைக் கொளுத்தியதற்குப் பதிலாக ராமனைக் கொளுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவே அய்யா அவர்கள் தன் கைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த வாசகமணிகள். மரணத்தைச் சந்திப்பதற்குச் சரியாக 15 நாட்களுக்கு முன்பேகூட அய்யா அவர்களின் கையிலே இருந்த எழுச்சி ஆயுதம் இராமனை எரிக்க வேண்டும் என்பதாகும். இதன் தொடர்ச்சியாகத்தான், தலைநகர் டில்லியில் ஆண்டுதோறும் இராம லீலா என்ற பெயரில் தென்னகத்துத் தீரர்களின் மேலானவரான திராவிடர் -_ ஆரியர் போரினைக் குறித்த இராமாயணப் பாத்திரமான இராவணனையும், கும்பகர்கணன் போன்றவர்களையும் பெரு உருவாகச் செய்து, இராமன், லட்சுமணன் வேடம் போட்டவர்களை எரித்து மகிழும் தசரா பண்டிகைக்கு ஒரு மைதானத்திற் கொண்டாடுவதும், அதில் பிரதமர், குடியரசுத் தலைவர் போன்றவர்கள் கலந்துகொண்டு மகிழ்வதும் நடைபெற்று வருகின்றது. மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், பிரதமர் போன்றவர்கள், மத்திய அரசுப் பொறுப்பில் உள்ளோர் பகிரங்கமாகக் கலந்துகொள்வது எவ்வகையிலும் நியாயமாகாது என்பதைச் சுட்டிக்காட்டி, கழகத்தவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களும், கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் நானும் இரண்டு கடிதங்களை பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களுக்கு அனுப்பின இந்தச் செய்தியை தினத்தந்தி அன்று கார்ட்டூ வெளியிட்டது. ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அன்னையார் அனுப்பிய தந்தி வாசகம் “Your participation in Ramlila burning the effigy of the great Dravidian hero Ravana, is against all cannons of secularism and highly provoking and insulting to millions of Dravidians hence requesting you to desist from this dastardly. Act otherwise we Dravidians, would be burning the effigies of Rama and you, on mass level throughout the length and breath of Tamilnadu.” E.V.R. MANIAMMAI, Leader, Dravidar Kazhagam குறிப்பு: தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘You’ என்ற வார்த்தை ஜனாதிபதியையும், பிரதமரையும் குறிப்பிட்டு அவர்களது உருவத்திற்கும் தீ வைக்கப்படும் என்று பொருள்படுவதால், தபால் தந்தித் துறையின் சட்டதிட்ட விதிகளுக்கு அது முரணானது என்று க தபால்_தந்தி துறையினரால் மறுக்கப்பட்டது. இன்றைக்கு மாலைக்குள் இந்தத் தந்தி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், போய்ச் சேரவேண்டிய அவசியம் இருப்பதால் ‘You’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு அவசரத்தந்தி உட கொடுக்கப்பட்டது. ஆனால் தபால்_தந்தி துறையினரால் மறுக்கப்பட்ட ‘You’ என்ற வார்த்தையும் சேர்ந்த தந்தியின் முழு வாசகமும் அப்படியே ஜனாதிபதி அவர்கட்கும், பிரதமருக்கும் பதிவுத் தபால் மூலம் உடன் இன்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தேன்.. பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தின் ஆங்கில விவரம் To Hon’ble Tmt. Indira Gandhi, Prime Minister of India, NEW DELHI. Respected Madam Prime Minister, I, the General Secretary of the Dravidar Kazhagam, am addressing this letter on behalf of our organization. Since this letter concerns about a most vital and most urgent matter, I request that this may perused as prompt as possible that your reply may reach me earlier. The month of October means the festival of Ramlila for you people who live North beyond the ghats of the Vindhya Range, of course, it is joy and jolly, merry and mirth, pomp and pageantry for the people of the North. But what about us? Shame, humiliation and ridicule. By the end of this month, New Delhi, our capital and very many cities of the Northern India are going to witness one more annual repetition of the festival of ashes i.e. Ramlila. Madam, you and your colleagues of the Central Government and the multitudinous horde of the descendants of the Aryan-race now living in the Northern States of the country not excluding the President and Vice-President of the Republic, never care to respect the feelings of the Southerners. If you have cared so, then you would not have ventured to burn the effigies of the three choicest heroes of the Dravidan race in the guise of honouring a hero of oreligious epic. To burn, Ravana and to set fire to his brother Kumbakarna and son meganatha may be a joke to you. But as the Prime Minister of this country it is your duty to look into the echoes and the repercussions that are being experienced by the people of the South which alone can provide a deserving meaning to the much talked about tern “nataional integration”. Madam, let it not be misunderstood that it is due to some perversion that we people of the south claim an affinity, a common lineage with the past heroes of the Ramayana. We foot our claim on irrefutable authorities including your father, the late lamented Jawaharlal Nehru. The following quotation taken from his letter written to you when you were his tender child, we hope, will make you think deeply over this matter:- “In the Ramayana we are told that Rama was helped by the monkeys in South India and Hanuman was the great hero of the monkeys. It may be that the story of the Ramayana is reallya story of the fights of the Aryans against the people of the South whose leader was Ravana. Probably the “Monkeys” were the dark people living in Southern India.” - “Letters to a Daughter from the Father” Hence we request you goodself, to be broad-minded and sensitive enough to understnad our deep feelings. To dishonour our feelings, to would our susceptibilities will lead to something unwanted. Our demands are: (1) The Government of India must put an end to the practice of celebrating the festival of Ramlila, with the participation of V.I.P.s like the President, and the prime Minister etc. (2) The Govt. of India’s policy is secularism. As the head of the Government which profess secularism, your participation in such functions, ridiucules very the principles. With all humility yet with all firmness and determination, we would like to point our that if you fail to concede our reasonable demands. We will be forced to take steps to safeguard, our honour and self-respect in a MISERABLE way. We will be forced to make arrangements for a paralled celebrataion here to counter your FESTIVITIES there. Yes, we will be celebrataing RAVANLILA here if you fail to ban the celebration of Ramlila there. Madam, we would hasten to make clear this point by submitting that this is not something of a threat; but this is a rational demand based on ethnological grounds and historical authorities clubbed with social and cultural background. Hence we request you to be kind enough to look into this demand and do the needful, failing which, we are constrained to organise Ravanlile festivals throughout the length and breadth of Tamil Nadu, burning the effigies of Rama, and Sita with the equal pomp, pageantry and patronage by the Dravidians i.e. Tamil masses. 17-10-1974 Yours sincerely, K.VEERAMANI, General Secretary, Dravidar Kazhagam. பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தின் தமிழாக்கம் பெறுவோர்: மாண்புமிகு திருமதி இந்திராகாந்தி, இந்தியப் பிரதமர், புதுடில்லி. மதிப்பிற்குரிய பிரதமர் அம்மை- யார்அவர்களுக்கு, திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகிய எங்களுடைய கழகத்தின் சார்பில் இந்தக் கடிதத்தை தங்கட்கு எழுதுகிறேன். இந்தக் கடிதம் மிகவும் முக்கியமானதும், அவசரமானது- மானதாகையால், இதை அவசரமாகப் பரிசீலித்து, உடன் பதில் எழுதக் கேட்டுக் கொள்கிறேன். வடக்கே, விந்தியத்திற்கு அப்பால் வாழும் உங்கள் மக்களுக்கு அக்டோபர் மாதம் வந்தவுடனே ராமலீலாக் கொண்டாட்டம் துவங்கிவிடுகிறது. இந்த ராமலீலா வடக்கே உள்ள மக்களுக்கு வேண்டுமானால் இன்பமாகவும், இனிமையாகவும், களிப்பாகவும், உல்லாசமாகவும், பகட்டாகவும் ஆரவாரங்-களாகவும் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு? வெட்கம், அவமானம், பரிகசிப்பு! இம்மாதக் கடைசியில், நமது தலைநகராம் டில்லியும், வட இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களும், ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டிருக்கும் தீயிடும் விழாவைக் காண இருக்கிறது. அதுதான் ராமலீலா. அம்மையார் அவர்களே, நீங்களும் உங்கள் அமைச்சரவையில் உள்ள சக அமைச்சர்களும் வடக்கே வாழ்ந்து கொண்டிருக்கும் ஆரிய இனத்தைச் சார்ந்த பல்வேறு கூட்டங்களும், இந்தியக் குடியரசின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியும் கூட விலக்கில்லாமல், தென்னாட்டு மக்களின் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுப்பதைப் பற்றிக் கவலைப்பட்டிருப்பீர்-­ களேயானால், திராவிட இனத்தின் மூன்று தலைசிறந்த நாயகர்களின் உருவத்தை, மத இதிகாசத் தலைவன் ஒருவனை மதிக்கிறோம் என்ற போர்வையில் எரித்திடமாட்டீர்கள். ராவணனை எரிப்பதோ, அவனது சகோதரன் கும்பகர்ணனை, மகன் மேகநாதனை நெருப்பில் போடுவதோ, உங்களுக்கு வேடிக்- கையாக இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில் தென்னாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பைக் கவனிக்க வேண்டியதும் உங்கள் கடமையாகும். அதுவே நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தமாகும். அம்மையார் அவர்களே! ராமாயணக் கதையின் தலைவர்களைப் பற்றி தென்னாட்டு மக்களாகிய நாங்கள் ஏதோ தவறான கருத்தைக் கொண்டு இதைக் கூறுவதாக தவறாக நினைக்கக் கூடாது. நாங்கள், மறைந்த மதிப்புக்குரிய உங்களது தந்தை ஜவஹர்லால் நேரு உட்பட, பல சரித்திர ஆசிரியர்கள் கூறிய உண்மையின் அடிப்படையிலே எங்கள் கருத்தை முன் வைக்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்கள் தந்தை உங்களுக்கு எழுதிய கடிதங்கள் கொண்ட நூலில் உள்ள கருத்து. இதுகுறித்து நீங்கள் மேலும் சிந்திக்கப் பயன்படும் என்று கருதுகிறோம். ராமாயணத்தில், குரங்குகளால் ராமனுக்கு உதவி செய்யப்பட்டது என்று அனுமான் குரங்குகளின் தலைவனாக இருந்தான் என்றும் சொல்லப்படுகிறது. ராமாயணக் கதை தென்னாட்டு மக்களின் தலைவனான ராவணனை எதிர்த்து, ஆரியர்கள் நடத்திய போரையே குறிக்கும், ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள குரங்குகளும் தென்னிந்தியாவில் வாழ்ந்த கறுப்பர்களையே குறிக்கும். - (“Letters to a Daughter from the Father”) எனவே பரந்த நோக்கத்தோடு எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறினால், விரும்பத்தகாத நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தவேண்டி வரும். எங்களுடைய கோரிக்கைகள்:-_ 1. இந்திய அரசு ராமலீலா விழாவிற்கு முற்றுப்பு வேண்டும். பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கியமானவர்கள் அதில் கலந்துகொள்ளக் கூடாது. 2. இந்திய அரசாங்கத்தின் கொள்கை மதச்சார்பின்மையாகும். அரசாங்கத்தின் கொள்கை மதச்சார்பின்மை என்று இருக் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்வது மதச் சார்பின்மைக் கொள்கையையே கேலி செய்வதாகும். எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நீங்கள் புறக்கணித்தால், எங்களுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, வருந்தத்தக்க நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டியவர்களாவோம் என்பதை மிகுந்த அடக்கத்துடனும், தெளிந்த முடிவுடனும், உறுதியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம். ராமலீலா விழாவுக்கு எதிர்ப்பாக, ஒரு விழாவை நாங்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆம்! நீங்கள் ராமலீலாவைத் தடை செய்யாவிட்டால், நாங்கள் ராவண லீலாவை நடத்துவோம். அம்மையார் அவர்களே! இது உங்களை மிரட்டுவதற்காகக் கூறப்படுவதல்ல என்பதை பணிவன்புடன் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம். இது வரலாற்றுப் பின்னணியில், பகுத்தறிவு அடிப்படையில் சமுதாய, பண்பாட்டுச் சூழ்நிலையுடன் வரலாற்று ஆதாரங்களோடு வைக்கப்ப கோரிக்கையாகும். எனவே, இந்தக் கோரிக்கையைக் கவனித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால், எங்களுடைய இயக்கத்தின சார்பில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ராமன், சீதை உருவங்கள் கொளுத்தப்பட்டு, ராமலீலா எவ்வளவு மகிழ்ச்சியுடன் களிப்புடனும் கொண்டாடப்படுகிறதோ, அதே மகிழ்ச்சியுடனும் களிப்புடனும் திராவிடர்களால் அதாவது தமிழர்களால் ராவண லீலா கொண்டாடப்படும். 17-10-1974 -ஈரோட்டு பூகம்பம்-
Posted on: Wed, 24 Jul 2013 07:26:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015