ஒருகாலத்தில் நமதூரில் - TopicsExpress



          

ஒருகாலத்தில் நமதூரில் ஏழைகள் அதிகமாக இருந்தனர்.. அதற்காக வசதி படைத்த சிலரிடம் பணம் வசூல் செய்து ரொட்டியும்,கறியும் 17,27 இரவுகளில் பள்ளிவாசலில் கொடுக்கபட்டது..இப்போது நமதூர் பணம் செல்வாக்கில் அல்ஹம்துலில்லாஹ் செல்வ செழிப்பாகத்தான் இருக்கிறது.. (கூரை வீடுகளே இல்லை)உணவு பஞ்சத்தில் யார் இருக்கிறார்கள் நமது ஊரில்...ஏதோ ஒரு சிலர் தான்..அவர்களுக்கும் நமதூரில் உள்ளே ஒரு சில நல்லவர்கள் தேடி சென்று உதவி செய்கிறார்கள்...பிறகு எதற்கு இவ்வளவு பணத்தை(2 இலட்சம் 3 இலட்சம் என்று) வீண் விரையம் செய்ய வேண்டும்....உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் 17,27 வெறும் ரொட்டிக்காக மட்டும் தானே பள்ளிவாசலில் கூட்டம் அலை மோதுகிறது...இதற்காக எத்தனை பேரை தொழுகைக்கு அனுப்பாமல் புனித ரமலான் மாதத்தில் ரொட்டியையும்,கறியையும் காட்டி இலவசமாக வேலை வாங்குகிறீர்கள்...அந்த தீமையை எல்லாம் அந்த ரொட்டி கறி ஈடு செய்யுமா...? உண்மையில் இந்த 2இலட்சம் 3இலட்சம் தகுதியான ஏழைக்கு சென்றால் இந்த ரமலான் மாதத்தில் நன்மை பல மடங்கு கிடைக்கும் நமதூர் வாசிகளுக்கு..அல்லாஹ்விற்கு நீங்கள் எல்லாரும் பதில் சொல்லியாக வேண்டும்... நண்பர்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்... ரோட்டிகறியா, இஸ்லாமிய வழிமுறையா..?
Posted on: Fri, 19 Jul 2013 16:52:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015