கென்யாவில் முகமது - TopicsExpress



          

கென்யாவில் முகமது நபியின் தாயார் பெயரை சொல்லாத தமிழர் ஒருவர் இஸ்லாமிய தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் வணிக வளாக கட்டிடத்திற்குள் அல்கொய்தாவுடன் தொடர்புடைய சோமாலியாவை சேர்ந்த அல் ஷபாப் இஸ்லாமிய தீவிரவாதிகள் சனிக்கிழமை அன்று புகுந்து கையெறிக்குண்டுகளை வீசிய கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் நடராஜன் உள்பட இரு இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஸ்ரீதரின் மனைவியும் படுகாயமடைந்தார். மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர்.... பின்பு அங்கிருந்தவர்களை மனித கேடயமாக பிடித்து வைத்துக்கொண்டு பாதுகாப்பு படையினரிடம் தொடர்ந்து அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜோஷூவா ஹக்கீம் வெளியில் வந்து லண்டன் ஊடக நிறுவனம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில், முதுகில் ஆயுதங்களை சுமந்து கையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளுடன் இளம் தீவிரவாதிகள் வணிக வளாகத்திற்குள் வந்ததை கண்டேன். பின்பு அவர்கள் மாலில் இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இடையே, அவர்கள் முஸ்லிம்களை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக அழைத்தனர். அவர்கள் முஸ்லிம்களா என சோதித்த பிறகு சிலரை வெளியே அனுப்பி வைத்தனர். இஸ்லாத் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காத மற்றவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றனர். அப்போது எனது அடையாள அட்டையில் இருந்த ஜோஷூவா ஹக்கீம் என்ற பெயரில் ஜோஷூவா என்ற கிறிஸ்தவ பெயரை கட்டை விரலில் மறைத்து வைத்துக்கொண்டு ஹக்கீம் என்ற பெயரை மட்டும் காண்பித்தேன். உடனே அவர்கள் ஹக்கீம் பெயரை பார்த்து முஸ்லிம் என நம்பி வெளியே போக சொன்னார்கள். எனக்கு அடுத்து வந்த ஒரு இந்தியரிடம் அவர்கள் முகமது நபியின் தாயார் பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவரால் (ஸ்ரீதர் நடராஜன்) பதிலளிக்க முடியவில்லை. உடனே தீவிரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றனர் என்று தெரிவித்துள்ளார். >>அந்த டமில் பெரிச்சாளிகள் எல்லாம் எங்கே போனார்கள்? பகுத்தறிவு கோழை மணி, டிராமாவலன், சைமன் எல்லாம் எங்கே? இறந்த அந்த தமிழன் இவர்கள் கண்ணில் தெரியவில்லையோ? போஸ்டர் புரட்சியாளர்கள் எல்லாம் சாராயம் குடித்துவிட்டு இந்நேரம் பன்றி பிரியாணிக்காக காத்துகொண்டு இருப்பார்கள் என்று எண்ணுகிறோம்?
Posted on: Thu, 26 Sep 2013 05:20:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015