கிழக்கு மாகாண ஆளுனர் - TopicsExpress



          

கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம மற்றும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் ஆகியோரை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லையென ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளார். கிழக்கு மாகாண சபையில் வீனான பிரச்சனைகளை தோற்றுவிக்கும் விமலவீர திஸாநாயக்காவை தற்போதைக்கு மாற்ற வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் ஐனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை நேற்று முன்தினம் அலரிமாளிகைக்கு அழைத்து கலந்துரையாடிய போதே ஐனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர்கள் ஆளுனருடன் முரண்பட்டுக்கொண்டும், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டு சபை அமர்வு பகிஸ்பரிப்பிலும் ஈடுபட்டு வரும் சூழ்நிலையிலேயே மேற்படி ஐனாதிபதி அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் தற்போதைய ஆளுனரும், முதலமைச்சரும் தான் தொடர்ந்து இருப்பார்கள். அதில் மாற்றம் ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது.ஆளுனர் மற்றும் முதலமைச்சருடன் முரண்பாட்டை தோற்றுவிக்கும் பிண்ணனியில் உள்ளவர்களை நான் அறிவேன். அவர்களின் எண்ணம் ஒரு போதும் பலிக்காது எனவும் ஐனாதிபதி தெரிவித்தார். அதே வேளை விமலவீர திஸாநாயக்க வீணாண முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றார். ஆளுனர் முதலமைச்சர் மாறாவிட்டாலும் கல்வியமைச்சசை வேரொருவருக்கு வழங்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று ஐனாதிபதி கடும் தொனியில் குறிப்பிட்டார். இதேவேளை கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்காவையும் விசேடமாக அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
Posted on: Sat, 22 Jun 2013 19:03:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015