தென்புலத்தார் தெய்வம் - TopicsExpress



          

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. மு.வ உரை உரை: தென்புலத்தார், தெய்வம் விருந்தி்னர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும். கலைஞர் உரை: வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்தி்க் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம். சாலமன் பாப்பையா உரை: இறந்து தென்தி்சையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தி்னர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு. Translation: The manes, God, guests kindred, self, in due degree, These five to cherish well is chiefest charity. Explanation: The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Sat, 24 Aug 2013 02:30:53 +0000

Recently Viewed Topics




© 2015