பெருந்தலைவர் - TopicsExpress



          

பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடத்தில் என்கட்சியின்சகோதர சகோதரிகளுடன் நினைவஞ்சலி செலுத்துகிறோம் பெருந்தலைவார் மறைந்த நாள் நினைவிற்கு வருகிறது .அக்டோபர் 2 கட்சிசார்பில் காந்தி ஜெயந்தி விழா பெரியவர் [அப்பா பெருந்லைவரை அப்படித்தான் அழைப்பார்]சரியாக வந்து விடுவார் என்று சொல்லிக்கொண்டே கிளம்பிக்கொண்டிருந்தார்கள் அப்போது தொலை பேசி ஓலிக்கிறது எடுத்தவர் அலரிக்கொண்டே அண்ணே பெரியவர் வரமாட்டார் என விம்முகிறரர் செய்தி அறிந்து அப்பா அழுத அழுகை காந்தி பிறந்த நாளிலேயே போயிட்டீங்களாய்யா என்று தன் தலைவனைப்பார்க ஓடியது ,உடனே வானெலியைத்திருகி அந்த சோக செய்தியும் இடையிடையே தலைவர்களின் அஞ்சலிக்கருத்துகளும் அழுது கொண்டே கேட்டதும் 8 திருமலைப்பிள்ளை ரோட்டைக் கடக்கும் போதும் "மகளே"[அப்பா என்னை அப்படித்தான் அழைப்பார்] பெரியவரைப்பார்த்து விட்டு வந்துவிடுகிறேன் சில நிமிடங்களில் எனறு சொல்லி அது சில மணிநேரங்களாக மாறி அப்பாவின் "fiat" காரில் வேர்க்க வேர்க் காத்திருந்த கணங்கள் இனி கிடையாதே என்று எண்ணி அழுத அழுகையும்,வீட்டில் சமைக்காமல்பல நாட்கள் நகர்ந்ததும் நினைவுக்கு வந்தது.பசிக்க உணவும் படிக்க கல்வியும் தந்த அந்ததலைவருக்கு ஆற்றும் அஞ்சலி நல்லஅரசியல்வாதியாகத்திகழ்வதே....... .....காட்சியும்,கட்சியும் வேறரக இருக்கலாம் நோக்கம் மக்கள் பபணியே.................்
Posted on: Wed, 02 Oct 2013 15:23:35 +0000

Recently Viewed Topics




© 2015