வெள்ள நிவாரண உதவி கோரல்!! - TopicsExpress



          

வெள்ள நிவாரண உதவி கோரல்!! வெள்ள நிவாரணம் அனுப்புவதற்கான வங்கிக் கணக்கு இலக்கம் உள்ளே!! சில வாரங்களாக இலங்கையில் பல பாகங்களிலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தென் தமிழீழ மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு திகோணமலை மாவட்டத்தில் சம்பூரிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இன்று வரை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மூதூர்ப் பகுதியில் முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கட்டைப்பறிச்சான் பகுதிக்கும் மூதூருக்குமிடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், கட்டைப்பறிச்சான் முகாமில் தங்கியிருந்த 1160 பேரும், கிளிவெட்டி முகாமில் தங்கியிருந்த 1005 பேரும், பட்டித்திடல் முகாமில் தங்கியிருந்த 428 பேரும், மணல் சேனை முகாமில் தங்கியிருந்த 217 பேரும் உணவு, மருந்து மற்றும் குடிநீர் அற்ற நிலையில் பட்டினி மற்றும் சுகாதார சீர்கேட்டுப் பிரச்சினையையும் எதிர்நோக்கியுள்ளனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல பிரதேசங்களிலும் குடியிருப்புக்களை மூடி வெள்ளநீர் அதிகரித்துள்ளதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளன. பொத்துவில், திருக்கோவில், பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாழைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை உள்ளிட்ட பெருமளவான பிரதேசங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும், உறவினர்களது வீடுகளிலும் தங்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இம்மழையால் நாளாந்த கூலித் தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடலிலும் கடுமையான கடலடி காணப்படுவதால் மீனவர்களது நாளாந்த தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வருவாயை இழந்துள்ளனர். மேற்படி கன மழை காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு உணவு, மருந்து நெருக்கடி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கான அவசர மனதாபிமான நிவாரண உதவிகளை வழங்கி உதவுமாறு அவசர கோரிக்கையினை விடுக்கின்றோம். வெள்ளநிவாரண உதவிகளை நேரடியாக இந்த தன்னார்வ தொண்டு நிறுவன வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். GREEN FUTURE NATION FOUNDATION CURRENT ACCOUNT No:- 1100075505 COMMERCIAL BANK WELLAWATTA BRANCH தொடர்புகளுக்கு : 0094212223739, 0094773024316, 0094773841113 Email ID: tnpfparty@gmail skajendren@yahoo நன்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைவர் செ.கஜேந்திரன் பொதுச் செயலாளர்
Posted on: Wed, 24 Dec 2014 10:58:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015