22 - 26 வயது..., ஆண்களுக்கு - TopicsExpress



          

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. 1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது போன்றே இருக்கும். 3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள். 4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள். 5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. 6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள். 7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள். 8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்? 9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும். 10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும். 11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது. 12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள். 13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் . 14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும். 15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள். # If u Really Like this Post... Visit my Last Post too, And wish him a Happy Friendship day...
Posted on: Sun, 04 Aug 2013 12:58:17 +0000

Trending Topics




© 2015