இன்றைக்கும் வழக்கம் போல - TopicsExpress



          

இன்றைக்கும் வழக்கம் போல 6 மணி கேபுக்கு 6.10-துக்குதான் என் இருக்கையில் இருந்து கிளம்பினேன். நான் இருப்பது நான்காவது மாடி.. லிப்டை நோக்கி வேகமாக நடந்தேன். லிப்ட் அப்போதுதான் ஐந்தாவது மாடியிலிருந்து மேல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மொத்தம் எட்டு மாடி. 2 நிமிடம் காத்திருந்து லிப்டில் ஏறினேன். லிப்டில் அவனை மீண்டும் பார்த்தேன்..அவனை நான் பார்ப்பது இது ஐந்தாம் முறையாக இருக்கலாம். ஒவ்வொரு முறையும் ஏதேனும் எரிச்சலடையும் வேலைகளை செய்தபடி இருப்பான் - அனைவரையும் தள்ளிவிட்டு முண்டியடித்து கொண்டு கேபில் முன் சீட்டை பிடிப்பது......கேண்டினில் வரிசையின் இடையில் புகுந்து டோக்கென் வாங்குவது....வாஷ் பேசினில் கையை கழுவிவிட்டு பக்கத்தில் இருப்பவர்களை பொருட்படுத்தாமல் கையை உதறுவது - இப்பொழுது லிப்டில் அவனை மீண்டும் பார்த்தவுடன் எரிச்சலடைந்தேன்...அவனைத் தவிர வேறு யாருமில்லை. நான் "G" பட்டனை மீண்டும் அழுத்திவிட்டு ஒரு மூலையில் நின்றேன். திடிரென அவன் enter key போல இருந்த அர்ரொவ் மார்க் பட்டனை அழுத்தி....மெயின் entrance-கு போகவேண்டிய லிப்டை திசைத் திருப்பி அலுவலகத்தின் பக்கவாட்டில் உள்ள entrance-கு போகும் படிச் செய்தான்....மீண்டும் எரிச்சலடைய வைத்தான்... அவனிடம் பேசி பயனில்லை...எனக்கு கேபை பிடிக்க வேண்டிய அவசரம். சைடு entrance-இல் இருந்து மெயின் entrance-கு நடந்து போக ஐந்து நிமிடம் ஆகும்....அவசர அவசரமாக ஓடி...கேப் டெஸ்க்கை அடைந்தேன். மணி 6.20.. "சாரி சார் இப்பதான் கேப் போகுது.. உங்களுக்கு கால் பண்ணோம்.. உங்க மொபைல் நாட் ரீச்சபிள்". மேலும் எரிச்சல்.. வெளியே பார்த்தேன் நல்ல மழை - கடந்த இரண்டு மாதமாக இப்படித்தான் விடாமல் பெய்து கொண்டிருக்கிறது - நான் இப்போது வேலை செய்யும் அலுவலகம் இருக்கும் இடம் மங்களூர் - இங்கு மழை காலம் ஆறு மாதமாம் - மழை அலுத்துவிட்டது எனக்கு. அப்பொழுதுதான் கவனித்தேன் அவளை... மழை விடுவதற்காகவோ அல்லது கேபுக் காகவோ காத்துக் கொண்டிருந்தால். என்னுடன் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவள்.. எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம்... ஒரு மாதிரியான ஏக்கம் அவள் மீது எனக்கு...காதலும் கூட. மத்த பொண்ணுங்களை விடவும்.. இவள் எனக்கு அழகாக தெரிந்தால்.. மாநிறம்... சொக்கி இழுக்கும் கண்கள்.. பெயர் பிருந்தா. பதிமூன்று அல்லது பதினான்கு வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்கிறேன். இன்னும் அழகு கூடி இருந்தது.. சந்தன கலர் சுடிதார்.. கண்களில் மையுடன்... நெற்றியில் அரக்கு கலர் பொட்டுடன்... வசீகரித்தால். நான் அவளைப் பார்ப்பதை...அவள் உணர்ந்தது போல் என்னைத் திரும்பிப் பார்த்தால். உடனே நான் பார்வையை திருப்பி...கேப் அட்மினிடம் - "அடுத்த கேப்ல இடம் இருந்தா என்னை ஜாயின் பண்ணிவிடுங்க பாஸ்" "ட்ரை பன்றேன் சார்.. எந்த ஏரியா சார் நீங்க" "நான் தாம்பரம் பக்கத்துலங்க" "தாம்பரம் பக்கதுல எங்க சார்", "கும்பகோணம்ங்க..." "ஓ கும்பகோணமா..." "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்... அடுத்த கேப்ல உங்கள ஜாயின் பண்ணிவிட்டுறேன்" "எவ்ளோ நேரம் ஆகும் பாஸ்..?", "மணி இப்ப 6.25.. 6.50-கு ஒரு கேப் இருக்கு சார்..அந்த ஏரியா பக்கம் தான் போகும்... அதுல நீங்க போலாம் சார்" "ஓகே பாஸ்" மீண்டும் அவள் இருக்கும் பக்கம் திரும்பினேன். கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு.. அவள் அருகே சென்று...தயக்கத்துடன் - "நீங்க பிருந்தா தான...?" "(சிரித்தவாறு) ஆமா ராஜா நான் பிருந்தா தான்...தயங்கி தயங்கி கேக்குற... சந்தேகமா?" "அப்டி இல்ல.. உன்ன இங்க பாப்பேன்னு நான் எதிர்பாக்கல..ரொம்ப வருஷம் ஆச்சுல அதான் கொஞ்சம் சந்தேகம்....அஅ.. அப்புறம்... நீ Msc Computer Sci படிச்சேன்னு கேள்விப்பட்டேன்... இங்க எப்ப ஜாப்ல சேர்ந்த.. எந்த ப்ரொஜெக்ட்ல இருக்க?" "இல்ல ராஜா.... நான் படிச்சது Mcom தமிழ் literature... இங்க front desk - reception-ல வொர்க் பன்றேன்.. வேலைக்கு சேர்ந்து ஒன் வீக் ஆகுது" "ஓ..அப்டியா ஓகே ஓகே" "நீ லிப்ட்ல இருந்து வரும்போதே பாத்துட்டேன்.. ஆனா எனக்கும் கொஞ்சம் டவுட் இருந்துச்சு நீ ராஜாதானானு.. அப்புறம் நீ அவர்கிட்ட உன்னோட ஊர் கும்பகோணம்னு சொன்னப்ப தான் கன்பார்ம் பண்னேன்" "ஓ...ஓகே ஓகே" அவள் பேசிகொண்டே இருந்தால்.....அவள் உதடயே பார்த்துகொண்டு இருந்தேன்... சிறு வயதில் அவள் மீது நான் கொண்டிருந்த ஏக்கம்.. மீண்டும் முளைவிட ஆரம்பித்தது....இப்போது ஏக்கம் மட்டும்தான்... "ராஜா.?!.. இவ்ளோ நாள் ஆச்சு.. இப்ப கூட என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணமாட்டியா..." அடுத்த கணம்... அவளை இழுத்து கட்டியணைக்க முயன்றேன்... "ஏ ஏ.. என்னப் பண்ற (பயத்தில் பின்னகர்ந்தால்)"... சுய நினைவுக்கு வந்தவனாய்... "இல்ல எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு பிருந்தா...ரெண்டு குழந்தைங்க இருக்கு...." "சார்ர்ர்ர்ர்ர்ர்ர்.... கேப் வந்துருச்சு வாங்க..."... க்கி க்கீ க்கி க்கீ க்கி க்கீ க்கி க்கீக்கி க்கீ க்கி க்கீக்கி க்கீ க்கி க்கீக்கி க்கீ க்கி க்கீ....ஓ அதுக்குள்ள 6.50 ஆயிடுச்சா..... பிருந்தாவை நினைத்தபடியே... 7.50 கேபை பிடிக்கக் கிளம்பத்தொடங்கினேன்....
Posted on: Sun, 28 Jul 2013 12:16:44 +0000

Trending Topics



olamalu
All Mums including but not limited to: Allie Ginger Catchpole Jo

Recently Viewed Topics




© 2015