இளைய தலை முறை நினைத்தாள் - TopicsExpress



          

இளைய தலை முறை நினைத்தாள் தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு கிடைக்கும். ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ்(Hitex)என்னும் நிறுவனம் நடத்திய கண்காட்சியில் இலங்கை சுற்றாலத்துறை கலந்து கொண்டது. அவர்கள் எதிர்த்து தமிழர்கள் “இலங்கையை புறக்கணிப்போம்” என்று போராட்டம் செய்ததுடன்,இனப்படுகொலை பற்றிய செய்தியை அங்கு வந்த மக்களிடத்தில் எடுத்துரைத்தனர் . ஹைதராபாத் அருகில் உள்ள ஹைடெக் சிட்டியில் (High Tech City) தனியார் நிறுவனம் நடத்திய வர்த்தக கண்காட்சியில் இலங்கை சுற்றுலாதுறை பங்கேற்றது . இந்த தகவலை அறிந்த தமிழ் உணர்வாளர்கள் ஐந்து நபர்கள் சிங்கள கடையின் முன்னர் சுமார் 30 நிமிடங்கள் கைகளில் பலகைகளை ஏந்தி இலங்கையை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர். அங்கிருந்து பொதுமக்களிடம் இலங்கை அரசு ஈழத் தமிழர்களின் மீது நடத்திய கொடுரைத்தை ‘என்ன செய்யலாம் இதற்காக’ என்ற புத்தகத்தின் புகை படங்கள் மூலம் விளக்கினர்.விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச் சந்திரனின் படத்தையும் அங்குள்ள மக்களிடம் காட்டினர். இதை பார்த்த பொதுமக்கள் சிலரும் ஊடகத் துறையினரும் தமிழக உறவுகளுடன் சேர்ந்து ஆர்பாட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் மக்களின் இந்த ஆர்பாட்டத்தை சற்றும் எதிர்பர்க்காத கண்காட்சியை நடத்தும் நபர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து தங்கள் கடையை மூடி விடுவதாகவும் கூறியுள்ளனர்.அதன்பிறகு ஆந்திரா காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மாதபூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு மன்மோகன் அவர்களை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது தமிழர்களை தற்காலிகமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு எச்சரிக்கை கைது தான் செய்துள்ளதாக தெரிவித்தார். அவர்களுடைய ஆவணைங்களை சரி பார்த்த பின் சொந்த ஜாமீன் அடிப்படையில் விடுதலை செய்வதாக உறுதி அளித்தார். இலங்கை விஷயம் குறித்து தனக்கு நன்றாக தெரியும் அதனால் நிச்சயம் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதாக ஆய்வாளர் கூறினார் .அதன் பின் தமிழகத்தில் இருந்து வந்த தொடர் அழைப்புகளை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் தமிழர்கள் அனைவரையும் ஆந்திரா காவல்துறை விடுதலை செய்தனர் .இந்த போராடத்தில ஈடுபட்ட தமிழர்கள் அனைவரும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் மென் பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் இலங்கை சுற்றுலாத் துறை ,கண்காட்சி பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் வணிகம் செய்ய நினைத்தால் தமிழர்கள் அங்கு சென்று தங்கள் எதிர்ப்பை போராட்டம் மூலம் நடத்துவார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எங்களின் இணையதளத்துக்கு உங்கள் ஆதரவு, இந்த பக்கத்தை போல கொடுக்க வேண்டும் என கோருகிறோம். pulampeyartamizarkal.net/
Posted on: Tue, 16 Jul 2013 10:28:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015