திருஓணம்:- ஹ்ருதயம் - TopicsExpress



          

திருஓணம்:- ஹ்ருதயம் நெறைஞ்ச ஓண ஷம்சகள்! :) நன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு! நன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு! * ஓணம் = திருவோணம் = ஷ்ரவணம் = Shravanam, எல்லாமே திருவோண நட்சத்திரத்தைக் குறிக்கும்! Aquarii Star! * திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பாசுரம்! ஓணம் அம்புட்டு பெருமையான நட்சத்திரம்! பெருமாளின் திருநட்சத்திரம்! மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதி, மத, இன பேதமின்றி இன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சியாக கேரளாவில் கொண்டாட படுகிறது. கேரளாவில் பிறந்த ஒவ்வெறு மலையாளிக்கும் கடந்த பத்து நாட்களாக அத்தபூ கோலமுடன் தூள் கிளப்பறாங்க. ஓணம் ஒரு பார்வை: இது ஒரு அறுவடை பண்டிகை என்ற போதும் பொதுவாக இது தங்களை வருடத்துக்கு ஒரு முறை காணவரும் புராண இதிகாச ராக்ஷ்ச ராஜாவான மஹாபலியை வரவேற்க்கவே இந்த பத்து நாள் விசேஷம். ஊரெங்கும் பூக்கள் கோலமாக பரவிகிடக்கும், புலி வேசம் போட்டு நடனம், வெள்ளம்களி (boat Race), யானை ஊர்வலம் என ஒரு வசந்தகாலத்து எபெக்ட் கொடுக்கும் பண்டிகை இது. ஓண பண்டிகையில் எனக்கு பிடித்த விசயம் முஸ்லிம், கிருத்துவர்கள், ஹிந்து என எந்த மத பாகுபாடு இல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதே!!! என்னை ஆச்சர்ய படுத்தும் பண்டிகையும் இது. ஏன் ஓணம்? ராக்ஷ்ச ராஜாவான மஹாபலி ஊழல், திருட்டு, பசி, பட்டினிசாவு என எந்த ஒரு கஷ்டங்களும் இல்லாமல் கேரளாவை ஆண்டுவந்த ராஜா, அவரை சோதனை செய்ய வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்னு மூன்று அடி மண் கேட்க, கொடை வள்ளலான மஹாபலி சரியென்று சொல்ல, விஷ்வரூபம் எடுத்த வாமனன் ஒரு அடிக்கு உலகத்தையும், இரண்டாம் அடிக்கு வானத்தை எடுத்துக்கொள்ள மூன்றாம் அடிக்கு தன் தலையை தந்து தான் தன் மக்களுக்காக தன் உயிரையும் கொடுக்க தயாரான மஹாபலிக்கு விஷ்ணு ஒரு வரம் தயாராகிறார், அதற்கு ராஜா வருடத்துக்கு ஒரு முறை தன் மக்களுடம் 10 நாட்கள் வாழவேண்டும் என்று கேட்க, வரம் பெற்ற ராஜா வருடத்துக்கு ஒரு முறை அறுவடை முடிந்த மக்கள் சந்தோஷமாக உள்ள காலத்தில் 10 நாட்கள் கேரளாவுக்கு வந்து செல்வதாக புராணம். அந்த பத்து நாட்களை கேரளமக்கள் ராஜாவை வரவேற்று கொண்டாடுவதே இந்த பூக்கோலமும் ஓணமும். தேசிய பண்டிகை ஆக்கலாம்??!! இன்று இந்தியர்கள் Divide and Rule Policyயால் பல இன, மத, சாதி அடிப்படையில் பிரிந்து இன்றும் (சுதந்திரத்துக்கு பிறகும்) அந்த தாக்கத்திலிருந்து வெளிவராமல், வெள்ளையன் வெளியேறினாலும் அவன் வழிபின்பற்றி வந்தவர்களால் இன்றும் பிரிந்துவாழ்கிறோம். இது போன்ற ஒரு பண்டிகையை தேசிய பண்டிகையாக்கினால் இன, மத, சாதி பிரிவினைகள் வரும்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. அனைத்து கேரள மக்களுக்கும், என் நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துக்கள். திருவோண ஆஷம்ஸகள்!!!
Posted on: Sun, 15 Sep 2013 04:43:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015