தமிழர் தேசத்தை நோக்கி - TopicsExpress



          

தமிழர் தேசத்தை நோக்கி செயல்படுபவர்கள் தொடக்கவேண்டிய முதல் போர்??? சுயசார்பு மற்றும் தற்ச்சார்பு மாநிலமாக தமிழர் தேசத்தையும் தமிழரையும் மாற்ற வேண்டும்!!!! தமிழர் பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்!!!!!!! நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களும் பிற மாநிலத்தையோ, அல்லது நமது தமிழினதிர்க்கோ துரோகம் இழைத்ததாகவோ தான் இருக்கிறது… அப்படி இருக்க தமிழர் தேசம் எப்படி அமையும்?? காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என நாம் இந்திய ஒன்றியத்தை கண்டித்தோம்; இலங்கையை கண்டித்தோம்… யாராவது பிரித்தானியாவை கண்டித்தோமா ? இலங்கை பொருட்களை வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தோம், யாராவது பிரித்தானியா பொருட்களை வாங்காதீர் என்று போராட்டம் செய்தோமா??? இது தானே நாம் அமெரிக்க அரசு மீதும் பிரித்தானியா மீதும் இன்நொடிப்பொழுதே நாம் தொடுக்கும் போர்???… சிந்திப்பீர்??? தமிழர் வணிகத்தை ஆதரித்து முன்னிலைப் படுதுங்கள்… தமிழர் தேசதின் மொட்டு அன்றே மலரத் தொடங்கும்… தமிழரின் நிலை உயர, இன்றைய தமிழரின் நிலையை பற்றிய சிந்தனை: காலை எழுந்தவுடன் பல் துலக்குவதில் இருந்து இரவு தூங்க செல்லும் போது ஏற்றப்படும் கொசுவத்தி சுருள்வரை அனைத்தும் அந்நியனின் பொருளாக இருக்கிறது, அதை வியாபாரப்படுத்துவது பார்ப்பனனாகவோ அல்லது பிற மாநிலத்தை சார்தவனாகவோ இருக்கிறான். அப்போது மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்கள் எங்கே????? அவர்கள் பன்நாட்டு நிறுவனத்திடமோ, அல்லது பிறமாநிலதவரிடமோ அடிமைகளாக வாழ்த்துகொண்டிருக்கும் நிலையில் தங்களை பெருமையாக நினைதுகொல்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். தமிழர்கள் அணைத்து வணிகத்தையும் தங்கள் கையில் எடுக்க வேண்டும். நாம் நமது கையில் இருந்து போகும் சிறுதுளி பணமாக இருந்தாலும் அது யாரை சென்றடைகிறது என்று சிந்தித்து செயல்பட வேண்டும்; நாம் செலவு செய்யும் பணம் ஒரு மாணத்தமிழனையே சென்றடைய வேண்டும்; என்று ஒவ்வொரு தமிழனும் இப்படி சிந்திக்கிறானோ அன்றே தமிழ் தேசியம் மலரத்தொடங்கும்.வேப்பம்குச்சில பல்துலக்கினால் பல் வெல்லையாகாதா, கோல்கேட்டுல துலக்கனா தான் வெல்லையகுமா என்ன???? சிந்திப்பர், நமது உதிரத்தை வேர்வையாக சிந்தி சம்பாதித்த பணம் வெளிநாட்டு மொதலைகளுக்கு செல்வதை தவிர்பீர். நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் பிரித்தானியா பொருட்களை புறக்கணிக்கவும் , உலகமயம் , தாராளமயம், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போன்றவற்றை கண்டித்தும் முழுநாள் உண்ணா நிலை போராட்டம் நடத்தினர். இதை வணிகர் சங்கத்தின் தலைவர் திரு. வெள்ளையன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் நாம் என்னென்ன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பதாகைகள் வைத்திருந்தனர். இந்த பகதாகைகளில் உள்ள பொருட்களை பார்த்தால் தலையே சுற்றி விடும். நீங்களே இப்படத்தை பாருங்கள். இப்படத்தில் உள்ள பொருட்களைத் தான் நம் மக்கள் அன்றாடும் பயன்படுத்துகின்றனர். இதை எப்படி நம் மக்கள் புறக்கணிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மாற்றாக கடைகளில் வேறு பொருட்கள் கிடைக்குமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டி உள்ளது. இனிமேல் தமிழ் மக்கள் பொருட்கள் வாங்கினால் அது எங்கு யாரால் தயாரிக்கப்பட்டது என்று தெரிந்து வாங்க வேண்டி உள்ளது. தமிழக மக்களை பொறுத்தவரை , நாம் வாங்கும் பொருட்களில் முதல் தேர்வு தமிழக தயாரிப்பாகத் தான் இருத்தல் வேண்டும். அடுத்து நமது மொழியையும், நம்மையும், நமது தமிழீழத்தையும் ஆதரித்த நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, நார்வே, சுவீடன், பின்லாந்து, போன்ற நாடுகளின் பொருட்களை வாங்குங்கள். பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளை புறக்கணிப்பதற்கும் முன்பு நாம் இந்திய ஒன்றியத்தின் பொருட்களையும், தயாரிப்புகலையும் முழுமையாக புறக்கணிக்க வேண்டும். கண்டிப்பாக இலங்கை பொருட்களை வாங்கக் கூடாது .தமிழக தயாரிப்புகளில் கண்டிப்பாக இது தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்று எழுதினால் அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். பெருமைப்படும்படியும் இருக்கும். இதை தமிழக வணிகர்கள் சங்கம் சிந்திப்பார்களாக ! குறள் 739: நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. மு.வ உரை: முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல. திருவள்ளுவன் கூறிய வழி நின்று அனைத்தையும் நாமே உருவாக்க வேண்டும், முன்பே இருப்பதை தமிழரிடமே பெற வேண்டும். நாம் பன்னாட்டு நிறுவனங்களை சாராமல் காதி பவன் போன்ற கைவினை பொருட்களை வாங்கினால் அது நமக்கும் பயனுள்ளதாக இருக்கும், வாங்கும் கைத்தொழில் செய்யும் தொழிலாளர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.விலையும் குறைவாக இருக்கும், நமது சுற்றுச்சூழளையும் மாசு படுத்தாத பொருளாக இருக்கும். தமிழர் தேச விடுதலையை நோகியே சிந்திப்போம். வென்றாக வேண்டும் தமிழ்.. அதற்க்கு ஒன்றாக வேண்டும் தமிழர்.. நாம் தமிழர்.. சிந்திப்போம் ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும் அதன் வேர் முதல் மூலம் வரை எங்கிருத்து வருகிறது என்று????? அன்றே தமிழர் தேசிய மொட்டு மலரத்தொடங்கும்…. tn.gov.in/hhtk/khadi/khadi-home.htm tn.gov.in/hhtk/khadi/khadi-village.htm BOYCOTT INDIA, US, & UK, based companies that are involved in the genocide of tamils in srilanka. START THE WAR AGAINST TERRORIST NATIONS THAT HAS PERFORMED THIS GENOCIDE ============================ AvivaBarclaysBPBritish Telecom Cable & Wireless Cadbury India Cairn Energy GSK Pharmaceuticals HSBC ICI India Johnson Matthey Logica CMG Marconi Telecom Marks & Spencer P&O Ports Reuters Scope International Shell India Standard Chartered Bank Unilever Virgin Atlantic Vodafone/airtel use aircel it’s eezha thamilar anantha krishnan’s. Maggi-Switzerland Nestle- Switzerland Unilever/Tesco/ Food brands ############ Annapurna salt and atta Bru coffee Brooke Bond (3 Roses, Taj Mahal, Taaza, Red Label) tea Kissan squashes, ketchups, juices and jams Lipton tea Knorr soups & meal makers and soupy noodles Kwality Wall’s frozen dessert Modern Bread, ready to eat chapattis and other bakery items Magnum (ice cream) Homecare Brands ########################### ActiveWheel detergent Cif Cream Cleaner Comfort fabric softeners Domestos disinfectant/toilet cleaner Rin detergents and bleach Sunlight detergent and colour care Surf Excel detergent and gentle wash Vim dishwash Magic – Water Saver Personal Care Brands: ############################### Aviance Beauty Solutions Axe deodorant and aftershaving lotion and soap LEVER Ayush Therapy ayurvedic health care and personal care products Breeze beauty soap Clear anti-dandruff hair products Clinic Plus shampoo and oil Close Up toothpaste Dove skin cleansing & hair care range: bar, lotions, creams and anti-perspirant deodorants Denim shaving products Fair & Lovely skin-lightening products Hamam Lakmé beauty products and salons Lifebuoy soaps and handwash range Liril 2000 soap Lux soap, body wash and deodorant Pears soap Pepsodent toothpaste Pond’s talcs and creams Rexona soap Sunsilk shampoo Sure anti-perspirant Vaseline petroleum jelly, skin care lotions TRESemmé Water Purifier Brand ######################## Pureit Water Purifier இனப்படுகொலை இலங்கைக்கு துணைபோகும் பிரிட்டிசு பொருட்களைப் புறக்கணிப்போம். இந்த பரப்புரையை மேற்கொண்டு வீதி வீதியாக வர இருக்கும் உங்கள் வீட்டு மாணவப் பிள்ளைகளுக்கு ஒத்துழைப்பு தாரீர்.இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்குவோம். -தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக, காரல் மார்கசு. செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் senkettru.wordpress/ youtube/watch?v=ev5Ax7diHqc
Posted on: Sat, 09 Nov 2013 14:50:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015