நீண்ட காலத்திற்கு பிறகு - TopicsExpress



          

நீண்ட காலத்திற்கு பிறகு நேற்றிரவு Upstream Colors பார்த்தேன். (கில்லர்மோ டெல் டோரோவின் Pacific Rim ஆர்வமாக அல்லது வெறியாக - இருந்தேன். துரதிஷ்டவசமாக அதை பார்க்க கிடைக்கவில்லை. அதனால் வேறெந்த திரைப்படத்தையும் பார்க்காமல் இருந்து விட்டேன். என்னவொரு "அறச்சீற்றம்" பாருங்கள்) வாவ் it was a psychedelic experience. Stanley Kubrick இற்கு பிறகு Alfonso Cuaron தான் Sci-Fi திரைப்படங்களின் மாஸ்டர் என்றிருந்தேன். ஆனால் அதற்கு போட்டியாக இத்திரைப்படத்தின் இயக்குனர் Shane Carruth வந்துவிட்டார் என்று நினைக்கிறேன். (இந்த பட்டியலில் இன்னொருவர் Christopher Nolan ஆனால் அவர் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் Interstellar வந்தால் தான் அதை உறுதிபடுத்த முடியும்) இவரது முந்தய படைப்பான Primer உம் ஒரு விஞ்ஞான புனைவுத் திரைப்படமே. (நான் பார்க்கவில்லை) பொதுவாக நான் தமிழ் திரைப்படங்களை - புதிதாக வந்துள்ள இளம் இயக்குனர்களை தவிர்த்து - பார்ப்பதில்லை. தமிழ் படங்களை பார்க்கும் அனுபவம் எப்பயிருக்கிறதென்றால் ................. வேண்டாம். "என்னடா இவன் இவ்வளவு ஆபாசமாக பேசுகிறான்" என்று கலாச்சார காவலர்கள் சண்டைக்கு வந்து விடுவார்கள். Salman Rushdie சிறுகதையை share பண்ணிய அனுபவம் ஒன்றே போதும். ஆனாலும் பின்நவீனத்துவ பாணியில் எடுக்கப்பட்ட Upstream Colors எனக்கு முழுமையாக புரியவில்லை. ("மூச்சிற்கு முந்நூறு தரம் பின்நவீனத்துவம் / பின்நவீனத்தும் என்று கூறும் உனக்கு இது புரியவில்லையா?" - Omar Sheriff ) இத்திரைப்படத்தை வேறுயாராவது பார்த்துள்ளீர்களா?
Posted on: Tue, 24 Sep 2013 07:35:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015