A.R.Rahman - மேல செம கடுப்புல - TopicsExpress



          

A.R.Rahman - மேல செம கடுப்புல இருந்தேன். “சிற்றிதழ் ஒன்றில் ஏதேனும் நேர்முகம் செய்துத்தர முடியுமா?” என்று கேட்டிருந்தார்கள். ஏ.ஆர். ரகுமானின் மின்னஞ்சல் முகவரியை ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்திருந்த சமயம். ஆகவே “சூஃபி தத்துவமும் – வாழ்வியல் மலர்ச்சியும்” என்ற இழையில் அல்லா ரக்கா ரகுமானை சந்தித்துப் பேசினால் நன்றாக இருக்கும் என்றென்னி – “உங்களுடம் சூஃபி சார்ந்து நேர்முகம் செய்ய வேண்டும். நேரம் கிடைக்குமா?” என்று அவருக்கு மின்னஞ்சலும் அனுப்பி இருந்தேன். 45 - நாட்கள் கழித்து அந்த மின்னஞ்சலை தனது உதவியாளருக்கு ரகுமான் ஃபார்வர்ட் செய்திருந்தார். உதவியாளரும் “சார்... லாஸ் என்ஜல்ஸ்ல இருக்காரு. இந்தியா வந்தா பார்க்கலாம்” என பதில் சொல்லி இருந்தார். இந்த ஒன் லைன் கான்வர்ஷேஷனுக்கு ரெண்டு மாசம் ஆகுதுன்னா... “அப்படியெல்லாம் இவங்கள சந்திச்சி ஒரு மண்ணும் ஆகப் போறது இல்ல... இனி அவர ஃபாலோ அப் செய்யவும் வேண்டாம், அத நாம எழுதி இங்க ஆகப்போறதும் ஒன்னுமில்ல” -ன்னு மனதில் நினைத்துக் கொண்டேன். “Introducing The Sunshine Orchestra” – இந்த விளம்பரப் படத்தை சற்று முன் பார்க்க நேர்ந்தது. ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், சக மனிதனாக ரகுமானின் மீதுள்ள மதிப்பு கூடுகிறது. சில விஷயங்கள் சார்ந்து உங்கள் மீது ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், இதைப் பார்த்த ஒற்றை நொடியில் உங்கள் மீதான அன்பு அபரிமிதமாக சுரக்கிறது ரகுமான். இன்னும் இன்னும் இதுபோன்ற சிறுவர்களைத் தயார் செய்யுங்கள். # விளம்பரப் படத்தை எடுத்த நண்பர் Vijay Kartik K அவர்களுக்கு வாழ்த்துக்களும் அன்பும்.
Posted on: Fri, 26 Jul 2013 08:54:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015