Sentamil Karthik இதை இங்கு பதிவு - TopicsExpress



          

Sentamil Karthik இதை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும்... அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்.. குறிப்பாக ஆளும்கட்சி அதிமுக-வை சார்ந்தவர்கள்... "" அதிமுக - பள்ளிகல்வி அமைச்சர் - வைகை செல்வன் அவர்கள், தயவு செய்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு , மாடு மேய்க்க போகலாம்.. "" நான்,சென்னை மாநகராட்சி அரசு பள்ளிகள் எப்படி நடக்கிறது என்று சும்மா oral ஆக கண்காணிக்க சென்றிருந்தேன்.. சில மாணவர்கள், பள்ளி நேரத்தில், சாலையில் அருகே உள்ள கடையின் முன் , தோள்மேல் கைபோட்ட படி சிகரெட் பிடித்து கொண்டு இருந்தனர்.. அவர்கள் அருகில் சென்று பேச்சு குடுத்தேன்.. நான் ; " தம்பி வகுப்பு நடக்க வில்லையா ??? ஏன் இப்படி வகுப்பு நேரத்தில் வெளியே திரிகிறீர்கள் " என்றேன்... அவன் ; டீச்சர் கிளாஸ்-க்கு வந்தா தானே கிளாஸ் நடக்கும் ?? நான் ; அடடே , அப்படியா ??? நீ என்ன படிக்கிறாய் ?? எந்த படத்திற்கு டீச்சர் இல்லை என்றேன்.. அவன் - நாங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு , தமிழ் , physics , chemistry , zoology என்றான்.. நான் - ஏண்டா , உங்க head master கிட்ட சொல்ல வேண்டியது தானே -ன்னு கேட்டேன்.. அவன் - நான் 10 வது தான் இந்த ஸ்கூல்ல வந்து சேர்ந்தேன்.. அப்போது இருந்து சொல்லிட்டு தான் இருக்கோம்.. நான் - ஓ , அப்போ இருந்தே இல்லையா சரி , ஏண்டா தம் அடிக்கிற ?? இந்த வயசிலையே ?? அவன் - அண்ணே , கிளாஸ்ல டீச்சர் வராத போது இப்படி வெளியே வந்து சுத்திட்டு இருந்தோம். அப்படியே தானா தம் அடிக்கிறதும் பழகிடுசின்னா... நானே பரவால்லை , இவன் கஞ்சாவே அடிப்பான்,. - என்று இன்னொருவனை கை காட்டினான்.. -நான் அப்படியே நொடிந்து விட்டேன்... மேற்கொண்டு , வட சென்னையிலும் , மத்திய சென்னையிலும் அரசு பள்ளிகளில் இதை விட கேவலம்.. கொடுமை.. பெரும்பாலான , அரசு பள்ளிகளில் போதிய மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இல்லை , உபரணங்கள் இல்லை , பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லை , கழிப்பிட வசதி இல்லை.. இதை விட , பல மாணவ , மாணவியருக்கு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.. அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் புதியதாக தொடங்கப்பட்டுள்ளன.. "" அதற்கு போதுமான ஆசிரியர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் தனிப்பட்ட முறையில் யாருமே இல்லியாம்.. ஒரே ஆசிரியர் தான் அனைத்து பாடங்களையும் நடத்துகிறார்களாம்.. அதுவும் மாணவர்களுக்கு புரியும் படி தெளிவாக சொல்லி கொடுபதில்லை என்றும் , ஏதோ பாடத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே நடத்துகிறார்கள் என்றும் " முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் " என்னிடம் சொல்லி வருந்தினார்கள்.. மதியம் தரப்படும் சாதத்தினை எடுத்துவந்து என்னிடம் ஒரு மாணவன் காட்டினான்.. அந்த சாதத்தின் மீது அவ்வளவு நாற்றம் , எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.. இதை எப்படி தம்பி சாப்பிடுகிறாய் என்றேன்.. உடனே அவன் குடும்ப கதையை சொன்னான்.. வேறு வழி இல்லை அண்ணா , இதை தான் சாப்பிட வேண்டும் என்றான்.. எல்லோருக்கும் நியாபகம் இருக்கும் என்று நினைக்கிறன்.. " தேர்விற்கு வினாத்தாள் , விடைத்தாள் சொதப்பலில் இருந்து ,மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்களை சொதப்பியது , எஞ்சினியரிங் கட் ஆப் மதிப்பெண்கள் சொதப்பியது , மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்குவது வரை கல்வித்துறை சாதனையின் புகழ் ஊரறியும்.. " அரசு பள்ளிகள் இவ்வளவு கேவலமாக , நிர்வாகம் இவ்வளவு படுமோசமாக இருக்க யார் காரணம் ?? பிறகு ஏன் தனியார் பள்ளிகள் பெருகாது ??? பள்ளிகளுகளின் மேம்பாடுகளுகாக ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது ?? யார் பாக்கெட்டில் விழுகிறது ??? இவர்களின் நிர்வாக லட்சணத்தால் , எதிர்கால தமிழகமான நமது மாணவர்கள் சீர் கெட்டு , சிகரெட் , கஞ்சா அடிக்கும் நிலைக்கு சென்றுள்ளனரே ??? அவர்கள் கைக்கு எப்படி இந்த போதை வஸ்துகள் எல்லாம் கிடைக்கிறது ?? இங்கே அரசு என்ன மயிரை புடுங்கியுள்ளது ?? சென்னை மாநகராட்சி பள்ளிகளிலையே இந்த கொடுமை என்றால் , தமிழ்நாட்டில் , கிராமத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும், இன்னும் எத்தனை பள்ளிகளில் இந்த அவல நிலை தொடருகிறதோ ??? எந்த அரசு , தனியார் பள்ளிகளை விட , சிறப்பாக அரசு பள்ளிகளை நிர்வகிக்கிறதோ, அது தான் நல்ல அரசு.. அது தான் கல்வி கண் கொடுத்த அரசு.. அன்று தனியார் பள்ளிகள் தானாக மறையும்.. தயவு செய்து , மக்கள் வரிபணதினை பள்ளிகளுக்கு செலவிடும் போது அதில் கை வைக்காதீர்கள்.. உங்கள் ஈன புத்தியை , பண வெறியை அதில் காமிக்க வேண்டாமே ?? முதல்வர் கவனிப்பாரா ?? தொடர்ந்து , தான் ஒரு குப்பை, இருக்கும் துறைகளில் படு மட்டமான துறை , கல்வி துறை தான் என்று தொடர்ந்து நிரூபித்து வரும் வைகை செல்வன் மீது, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பாரா ??? நமது எதிர்கால தமிழகம் என்று நம்பியிருக்கும் நமது மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்குமா ?? மிக்க வருத்ததுடன் - செந்தமிழ்..
Posted on: Mon, 08 Jul 2013 10:19:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015