So what if putting up poster during polls is not allowed. AIADMKs - TopicsExpress



          

So what if putting up poster during polls is not allowed. AIADMKs has tactically found a way to campaign. MGRs famous movie Aayirathil Oruvan, which also stars Jayalalithaa, will be screened again in film theatres in Tamil Nadu from 14th March onwards. The films digitized version has been released again for the younger audienceThe crowd savoured every moment, fully engrossed in the action and drama and enjoying the melodious music, tapping foot and swaying their heads. No catcalls, no hootings, no loud comments and no jokes. The crowd was there to watch the movie..“I first watched the film about 30 years ago. By then, it was a cult film in Tamil Nadu, what with the indirect message it contained, the dialogues that highlighted injustice in society and the plot that portrays the hero as a true leader of the oppressed,” said L Muthuswamy, a clerk at a private company, who had taken a day’s leave to watch the film once again. Born in the year the film was released, he said he had lost count the number of times he had watched the film.The enthusiasm among the people shows that puratchi thalaivar (revolutionary leader), our idaya deivam (the lord of our hearts) continues to be the biggest draw for the people of Tamil Nadu,” said S Rajkumar. Though he died over two decades ago, MGR still has committed fans — and dedicated voters — which Jaya inherited. ஆயிரத்தில் ஒருவனை வரவேற்ற எம்ஜிஆர் ரசிகர்கள் அரை நூற்றாண்டைக் கடந்தும் அழியாத புகழில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மீண்டும் திரைக்கு வந்திருப்பது எம்ஜிஆர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1965ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி இப் படம் முதன்முதலாக வெளியானபோது என்ன உற்சாகம் இருந்திருக்குமோ அந்த உற்சாகத்துக்கு கொஞ்சமும் குறையாத வகையில் எம்ஜிஆர் ரசிகர்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டதைக் காண முடிந்தது. எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் திரைப்படமான இதில், நாகேஷ், எம்.என்.நம்பியார், ஆர்.எஸ். மனோகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பி.ஆர். பந்துலு இயக்கத்தில், படத்தை அவரே தயாரித்தார். பந்துலு பண நெருக்கடியில் இருப்பதை அறிந்து இந்தப் படத்தை அவருக்கு அளித்தவர் எம்ஜிஆர் என்று போற்றப்படுகிறது. இந்தத் திரைப்படத்தை திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் ஜி. சொக்கலிங்கம் இன்றைய நவீன தொழில்நுட்பத்துக்கு தகுந்தபடி மாற்றியமைத்து தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்பட 120-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட்டுள்ளார். டிடிஎஸ் 5.1 தொழில்நுட்பத்தில், ரெஸ்டோரஷேன், டிஐ, கலர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், தென்காசி திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி ராம் திரையரங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே ரசிகர்கள், எம்ஜிஆர் உருவப்படம் பொறித்த பேட்ஜ்களையும், டாலர்களையும், கொடிகளையும் உடலில் கட்டிய வண்ணம் குவியத் தொடங்கினர். திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த 80 அடி உயர எம்ஜிஆர், ஜெயலலிதா கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர். எம்ஜிஆர் உருவப்படத்துக்கு தேங்காயில் சூடம் ஏற்றி தீபாராதனை செலுத்தி வழிபட்டனர். திரைப்படம் பார்க்க வந்த அனைவருக்கும் லட்டு வழங்கினர். சரவெடிகளும் வெடிக்கப்பட்டன. திரைப்படத்தை காணவந்த திருநெல்வேலியைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளர் எம்ஜிஆர் முருகன் (60) கூறுகையில், 15 பைசா, 25 பைசா கொடுத்து இந்தப் படத்தைப் பார்த்தோம். இப்போது ரூ.100 கொடுத்து பார்க்கிறோம். ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் எப்போது ரிலீஸானாலும் பார்க்கத் தயாராக உள்ளோம் என்றார். சிறப்புக் காட்சி டிக்கெட் ரூ.100-க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து ரூ.80, 60, ரூ.30 என டிக்கெட் விற்பனை நடைபெறும் என திரையரங்க உரிமையாளர் தெரிவித்தார்.
Posted on: Sat, 15 Mar 2014 09:22:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015