கடவுள் துகள் (God’s particle) - - TopicsExpress



          

கடவுள் துகள் (God’s particle) - பிரபஞ்சத்தின் பிறப்பு ரகசியத்தை ஆராய்ச்சி செய்ய துவங்கிய விஞ்ஞான உலகின் தொடர்பயணத்தின் அடுத்த மைல் கல்லாக கடவுளை நோக்கிய பயணம் நீட்சிமை பெருகிறது…… நூற்றாண்டுகளாய் தொடர்ந்த ஒரு ஆராய்ச்சியின் முடிவினை இன்று நாம் உறுதி செய்யும் அதே நேரத்தில் தின்னை பழம்பெருச்சாலிகளின் “ வெத்து உலறல்களையும் கேட்க்க முடிகிறது”.. ஆங்க்க் என்னத்த கண்டுபிடிச்சாங்கெ!!!...... இதை பற்றிய செய்தி எங்களுடைய வேதத்தில் பல ஆயிரக்கணக்கான வருடத்திற்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது…. இப்பொழுதுதான் இவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் என்று வியாக்கியானம் பேசுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.. .. உறுதிசெய்யப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளை எதற்கெடுத்தாலும் வேதங்களின் வசனங்களை மட்டுமே கோடிட்டு காட்டி இது எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிறார்கள் மதவாதிகள் …. என்னவோ இவர்களே பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொன்றாக கண்டுபிடித்தது போன்றும் அதையே சமகாலத்தில் இந்த விஞ்ஞானிகள் திரும்பவும் கண்டுபிடித்து பெருமை கொள்கிறார்கள் என்ற தொணியில் பேசுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது…. விஞ்ஞானம் என்பது ஒரு தொடர்பயணம் அது என்றும் முற்றுப்பெருவது இல்லை. காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப கண்டுபிடிப்புகளில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது….. விஞ்ஞானம் கண்டுபிடித்ததின் பலன்களை நாம் அனுபவித்து கொண்டே அதை விமர்சித்து கொண்டே இருப்பது நல்லது அல்ல…. “இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு படைப்புகளையும் ஆராய்சி செய்ய சொல்கிறது அதை பற்றி சிந்திப்போர்களுக்கு அதில் ஞானம் இருப்பதாக சொல்கிறது “ இறை வேதங்கள்.. விஞ்ஞானத்திற்கும் ஆன்மீகத்திற்குமான விடுபட்ட புள்ளிகள் எது என்பதை சிந்திப்போர்கள் அறிய வேண்டும்..அதை விட்டுவிட்டு பழம் பெருமை பேசிக்கொண்டு அறிவியலை வெட்டியாக விமர்ச்சிப்பது தவறு.. சமகால அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றிய நமது குழந்தைகளின் சந்தேகங்களுக்கு நம்மிடம் என்ன மாதிரியான தகவல்கள் உள்ளது?... குறைந்தபட்சம் நம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்காவது நம்மிடம் சமகால அறிவியல் தகவல்கள் உள்ளதா என்று நம்மை நாமே சோதிக்க வேண்டும்.
Posted on: Thu, 10 Oct 2013 05:43:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015