தமிழில் இருக்கும் - TopicsExpress



          

தமிழில் இருக்கும் சிறந்த இசை விமர்சகரின் புதிய கட்டுரை. இவரை தமிழ்ப்பத்திரிக்கைகள் இன்னும் எப்படி விட்டுவைத்திருக்கின்றன? //ஃப்ரான்க் சினட்ரா – எனது விருப்பத்திற்குரிய ஜாஸ்/ஸ்விங் குரல்களில் ஒன்று. பாடும் போது மிகமிக சர்வசாதாரணமாகப் பாடுவது போலத் தோன்றும். ஆனால் பாடலில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள்……..வாய்பேயில்லை. My way பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது பாராவில் “Flash flood” மாதிரி ஹைபிட்சில் பாடிகொண்டே சட்டென்று கீழிறங்கும். பாடும் முறையின் மீதி அவருக்கு அளப்பரிய ஆதிக்கம் இருந்தது. குரலை இறுதிவரை தன் கட்டுக்குள் வைத்திருந்தார்.அவரது தனித்தன்மை ஓவ்வொரு பாடலிலும் மிளிரத்தான் செய்தது. பாடும் முறையைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் இதற்கென அவர் பிரத்தியேக பயிற்சி எதுவும் எடுக்காவிடினும், தாளம் – பிட்சிங் போன்றவற்றில் அளப்பரிய உள்ளுணர்வு அவருக்கு இருந்ததாக உடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர். Mic effects எனப்படும் மைக்கின் உதவியுடன் குரலில் ஜாலங்கள் காட்டுவதில் அவர் வித்தகர். இந்த ஜாலத்தை அவர் ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, தொடர்ந்து அறுபது ஆண்டுகளாகச் செய்து வந்தார் என்று நினைக்கும் பொழுது பிரம்மிப்பே ஏற்படுகிறது.//
Posted on: Mon, 05 Aug 2013 17:28:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015