தீராத வினையைத் - TopicsExpress



          

தீராத வினையைத் தீர்ப்பதெது? ஒரு பக்திச் சொற்பொழிவரங்கம். சொற்பொழிவாற்றியவர், அரங்கத்தில் இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார், " முருகனுக்கு முகம் ஆறு ; கரங்கள் பன்னிரெண்டு. அறிவீர்கள்! கால்கள் எத்தனை?" சட்டென்று எழுந்த, ஒரு சிறுவன் சொன்னான். "கால்கள் இரண்டுதான்!" "ஏன் காலகள் மட்டும் இரண்டு?" அவருடைய இந்த இந்தக் கேள்விக்கு அரங்கிலிருந்து பதில் இல்லை! அவரே தொடர்ந்து சொன்னார். "பக்தி நிலையில் உன்னத நிலை இறைவனைச் சரணடைவதுதான். அப்படிச் சரணடையும் பக்தன் பன்னிரெண்டு காலகள் இருந்தால் எந்த இரு கால்களில் விழுந்து ஆறுமுகனை வணங்குவதென்று தடுமாறிவிடுவான். குழம்பிவிடுவான்.ஆகவேதான் ஆறுமுகனுக்குக் கரங்கள் பன்னிரெண்டானாலும், கால்கள் இரண்டுதான்!" -------------------------------------------------------------------------- நோய் என்பது தீர்க்ககூடியது. பிணி என்பது தீர்க்க முடியாதது. நோயை (Disease) மருத்துவர்கள் குணப்படுத்திவிடுவார்கள். பிணியை (chronic Disease) குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால்தான் குணப்படும். வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல் ஓராறு முகமும் ஈராறு கரமும், தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம் வாராத நிலை தன்னைச் சேர்க்கும் என்று துன்பத்தில் உழலும் மனிதர்க்கெல்லாம் வழி காட்டும் முகமாக கவிஞர் திரு. வாலி அவர்கள் எழுதிய பாடலை இன்று மகிழ்வுடன் பதிவிடுகிறேன் அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன் ------------------------------------------------------------------------- பாடல் ஆக்கம்:: கவிஞர் திரு. வாலி பாடியவர்:: திரு. T.M செளந்தர ராஜன் இராகம்: மலையமாருதம் தாளம்: ஆதி ------------------------------------------------------------------------- பல்லவி "ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம் வாராத நிலை தன்னைச் சேர்க்கும் அநுபல்லவி ஆராவமுதென அருள் மழை பெய்யும் கூரான வேல்கொண்டு கொடுமைகளைக் கொய்யும் ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம் வாராத நிலை தன்னைச் சேர்க்கும் சரணம் சுவாமி மலையில் சிவகுருவென்று திரு சீரலைவாயிலில் சூரனை வென்று தேமதுர மொழியாள் தேவானையை மணந்து திருப்பரங்குன்றில் தெரிசனம் தந்த அந்த ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம் வாராத நிலை தன்னைச் சேர்க்கும் மாமனைப் போலிரு மாதுடன் கூடி மாமலையில் பழமுதிர் சோலையிலாடி மாமயிலேறிட திருத்தணியைத் தேடி மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்து ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னைத் தீர்க்கும் - துன்பம் வாராத நிலை தன்னைச் சேர்க்கும்"
Posted on: Sun, 21 Jul 2013 06:34:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015