நான் ஏன் பாஜகாவை - TopicsExpress



          

நான் ஏன் பாஜகாவை ஆதரிக்கிறேன்...!!! எல்லா அரசியல் கட்சிகளிலும் பல தலைவர்கள் ஊழல் வாதிகள் ஒழுக்கம் கெட்டவர்கள், ஆனால் பிஜேபி மட்டும்தான் ஒரே கட்சி அங்கு பல நல்ல, நேர்மையான தலைவர்களை கொண்ட கட்சியாக உள்ளது, அதில் இந்த பதிவில் மூலம் கோவா மாநில முதல்வர் திரு. மனோகர் பாரிக்கரை பற்றி அறிந்து கொள்வோம்... இந்த இரு சக்கர வாகனம் பின் புறம் இருப்பவர்தான் கோவா மாநில பிஜேபி முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர்...!!! இன்று இந்தியாவில் இருக்கும் அனைத்து முதல்வர்களிலும் அதிகம் படித்தவர் இவர் தான் - இந்தியாவின் தலை சிறந்த, ஒவ்வொரு இந்திய மாணவனின் கனவு கல்லூரியான IIT யி‌ல் பொறியாளர் கல்வி கற்ற முதல் முதல்வர், இவர் தற்போது இந்தியாவில் அரிதாக காணப்படும் ஒழுக்கமான அரசியல் தலைவர்களில் ஒருவர். மேலும் பெரும்பாலும் இவர் தான் கோவா அரசு தலைமை அலுவலகத்தில் இருந்து தனது அன்றைய அலுவலக பணியை முடித்து விட்டு போகும் கடைசி ஆளாக இருப்பார் என்று அங்கு உள்ள ஊழியர்கள் கூறுகின்றனர், இதற்க்கு காரணம் தன்னிடம் வரும் அரசு கோப்புகளை அன்றய தினமே ஆராய்ந்து செயல் படுத்துபவர், முதல்வர் அலுவலகத்தின் அனைத்து கோப்புகளை பற்றிய நிலையை தனது விரல் நுனியில் வைத்து இருப்பாராம், மேலும் பாரிக்கர் தான் சுவாமி விவேகானந்தர் மற்றும் தீன் தயால் உப்பாதியா வகுத்த பாதை படி நடப்பவர் என்று தன் எளிமை மற்றும் நேர்மைக்கான காரணமாக கூறுகிறார். இன்றய படித்த சமூகத்திற்கு பாரிக்கர் ஒரு எடுத்துக்காட்டு, அரசியல் மற்றும் நம் பாரத நாட்டை சதா குறை கூறாமல் அந்த குறையை நிவர்த்தி செய்ய களத்தில் இறங்கிய உயர் கல்வி பயின்ற ஒரு உத்தமர், இவரை போன்ற தலைவர்களை நமக்கு உதாரணமாக எல்லோரும் எடுத்துகொள்ளலாம்... நான் பதிவு செய்துள்ள இந்த புகை படம் கோவா முதல்வர் தனது அமைச்சருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் புதிதாக போட பட்டுள்ள "service road " சோதனை செய்த போது எடுத்த படம், மேலும் மனோகர் பாரிக்கர் அவர்கள் பெரும்பாலும் முதல்வர் அலுவலகம் வருவது எந்த வித ஆர்ப்பாட்டம், படை பரிபாலங்கள் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் அதுவும் ஒரே ஒரு காவல் அதிகாரியுடந்தான்...!!! திரு மோடி அவர்கள் பிரதமராகவும்,திரு மனோகர் பாரிக்கர் துணை பிரதமர் ஆகினால் நம் நாடு சிறக்கும்... மேலும் இப்படி ஒரு உயர் கல்வி படித்த, நேர்மையான, எந்த வித அரசியல் குடும்ப பின்னணி இல்லாத, திரமயானவருக்கு முதல்வராகும் வாய்ப்பு வழங்கிய பிஜேபி கட்சியை நிச்சயம் பாராட்டாமல் இருக்கு முடியாது... thehindu/news/national/other-states/parrikars-austere-ways/article2976900.ece This is Manohar Parrikar, CM, Goa. The only IITian CM. He is totally devoted to his work. At 9.30 pm he is the only man left in Secretariat with a resolve not to leave office before finishing the files. He knows the subject of each file. I was fortunate enough to capture this workaholic , clean politician at his office in my recent trip to Goa. Here is a politician who is following Swami Vivekanandji & Pandit Deendayal Upadhyayji. Youth of this country should join politics following politicians like Manohar instead of mere criticising politicians.
Posted on: Mon, 19 Aug 2013 10:47:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015