முகநூல் நாடாளுமன்றம் - TopicsExpress



          

முகநூல் நாடாளுமன்றம் (Facebook Parliament) இடிந்தகரை 627 104 திருநெல்வேலி மாவட்டம் நவம்பர் 4, 2013 உடனடி பிரசுரத்திற்கு முகநூல் நாடாளுமன்றம் (Facebook Parliament) தமிழக அரசியலை தூய்மைப்படுத்தவும்; தனிநபர் துவேசங்களை மையப்படுத்தும் நிலையைப் புறந்தள்ளி மக்கள் பிரச்சினைகளையும், அரசின் கொள்கைகள், திட்டங்கள் பற்றிய விவாதத்தை முன்னிறுத்தவும்; அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின், அவர்கள் ஏஜென்டுகளின் ஆதிக்கத்தைக் குறைத்து, மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவும்; நமது சனநாயகத்தைக் காக்கவும் முகநூல் நாடாளுமன்றம் (Facebook Parliament) என்ற அமைப்பை ஒத்த்க் கருத்துடைய தோழர்கள் இன்று நவம்பர் 4, 2013 அன்று இடிந்தகரையில் துவங்குகிறோம். தமிழர்களாகிய நமது அரசியல் நிலை பற்றி ஒரு நிமிடம் சிந்தியுங்கள். மத்திய அரசு நம்மை மாற்றாந்தாய் மனப்பான்மையோடும், பகையுணர்வோடும்தான் பார்க்கிறது, நடத்துகிறது. காமன்வெல்த் மாநாட்டுக்குப் போகாதீர்கள் என்கிறோம், போவார்களாம்! கூடங்குளத்தில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தொடர்ந்துப் போராடுகிறோம்; இரண்டு உலைகளையும் நிறுத்த மாட்டார்களாம், மாறாக எட்டு அணுஉலைகள் கட்டுவார்களாம். கூடங்குளம் கழிவுகளை கர்நாடகத்தில் வைக்க மாட்டோம் என்று போராடும் மக்களுக்கு மூன்றே நாளில் வெற்றி. கேரளத்தில் ஓர் அணுமின் நிலையம்கூட வைக்க மாட்டோம் எனும் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் கேரளத்திலிருந்து கர்நாடகத்துக்குப் போகும் எரிவாயு குழாய்கூட தமிழ் விவசாயிகள் நிலங்கள் வழிதான் போகுமாம். நமது ஆற்று மண்ணும், கருங்கல்லும், செங்கல்லும் கேரளா, கர்நாடகாவுக்குப் போகும்; ஆனால் அவர்கள் தண்ணீர் நமக்கு வராது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி, மீத்தேன் எடுக்க திட்டமிடுகிறார்கள். தமிழகக் கடற்கரையெங்கும் அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், தாதுமணற் கொள்ளை, அடுக்கடுக்காக அழிவுத் திட்டங்கள். தமிழர்களை காட்டிக் கொடுத்து தொடர்ந்து கப்பம் வசூலிக்கும் பெரிய அரசியல் கட்சிகள் எதையும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. மக்கள் பிரச்சினைகளை விவாதிக்காமல், மழலையர் பள்ளிக் குழந்தைகள் போல தமக்குள் அடித்துக் கொள்ளும், திசைதிருப்பும் வேலைகளைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகளும், கட்சித் தலைவர் குடும்பத்தின் கையாட்களாகவே நடந்து கொள்கிறார்கள். இந்த கைப்பாவைகளைப் (puppets) பார்த்துவிட்டு, நாமும் உண்மையான மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கத் தவறிவிடுகிறோம். நமது அரசியல் சக்தி (political energy) வீணடிக்கப்பட்டுவிடுகிறது. இந்த சூழ்ச்சியை தகர்ப்பதற்கு ஒரே வழி, சிந்திக்கும், செயல்படும் நாமனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்து, நகர்மன்ற உறுப்பினர்களாக மாறுவதுதான். முகநூலில் நாம் செலவிடும் நேரத்தில் கொஞ்சத்தையாவது தமிழ் நாட்டுக்காகவும், சனநாயகத்தைப் பாதுகாக்கவும், நமது அரசியல் அமைப்பை மாற்றவும், தேர்தலில் நல்ல விளைவுகளை உருவாக்கவும் பயன்படுத்தினால் என்ன? [1] தமிழகத்திலுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் பெயர்களிலும் பக்கங்கள் தொடங்குவோம் (உதாரணம்: Facebook_Parliament_Kanniyakumari). உங்கள் தொகுதி என நீங்கள் கருதும் தொகுதியின் பக்கத்தில் அல்லது பக்கங்களில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். [2] ஒவ்வொரு “முகநூல் நாடாளுமன்றம்” பக்கத்திற்கும் ஓரிரு சபாநாயகர்களை (Speakers) தேர்வு செய்வோம். அவர்கள் கூட்டாக அந்த முகநூல் நாடாளுமன்றத்தை நடத்தட்டும். [3] நம்மைப் போன்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்தத் தொகுதியின் கடந்தகால அனுபவங்கள், நிகழ்காலப் பிரச்சினைகள், வருங்காலத் தேவைகள் பற்றிப் பேசுவோம், விவாதிப்போம். குறிப்பாக கீழ்க்காணும், விடயங்களுக்கு முன்னுரிமைக் கொடுப்போம். [அ] சமூக அமைதி மற்றும் பாதுகாப்பு (Social Peace and Security) சம்பந்தமானப் பிரச்சினைகள். [ஆ] மக்கள் வளமாகவும், நலமாகவும் (Living Better and Safer) வாழ்வது குறித்த விடயங்கள். [இ] சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பயன்படுத்தும் விதம், பாதுகாக்கும் முறை (Natural Resources Utilization) பற்றிய விடயங்கள். [ஈ] பொருளாதார நிலைப்பு மற்றும் வளர்ச்சி (Economic Stability and Growth) பற்றிய விவாதங்கள். [உ] பிற அறிவார்ந்த விடயங்கள், மக்கள் பிரச்சினைகள். [4] நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது, தொகுதியில் போட்டியிடும் பல்வேறு வேட்பாளர்களின் தகுதி, நிறை, குறைகளையும் பற்றிப் பேசி, சிறந்தவரைத் தேர்ந்தெடுக்க உதவலாம். “எவன் வீட்டு இழவோ” அல்லவே தேர்தல்? நமது குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் முக்கியமான அரசியல் நடவடிக்கை அல்லவா? இந்த முயற்சிக்கு தமிழர் அனைவரும் உதவ வேண்டும், நம் சனநாயகத்தைக் காப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஒரு மிக மிக முக்கியமான எச்சரிக்கை: இந்த செயல்பாடு முகநூலோடு முடிந்துவிடக்கூடாது. இதை தொடக்கமாகக் கொண்டு தொடர்வது முக்கியம். Facebook_Parliament_Tiruvallur(SC) https://facebook/pages/FB-Parliament-Tiruvallur-SC/229891037170676 Facebook_Parliament_Chennai_North https://facebook/pages/FB-Parliament-Chennai-North/233627333463792 Facebook_Parliament_Chennai_South https://facebook/pages/FB-Parliament-Chennai-South/169710309903361 Facebook_Parliament_Chennai_Central https://facebook/pages/FB-Parliament-Chennai-Central/533324130091348 Facebook_Parliament_Sriperumbudur https://facebook/pages/FB-Parliament-Sriperumbudur/382904811843279 Facebook_Parliament_Kancheepuram(SC) https://facebook/pages/FB-Parliament-Kancheepuram-SC/1431645420392440 Facebook_Parliament_Arakkonam https://facebook/pages/FB-Parliament-Arakkonam/606943359351484 Facebook_Parliament_Vellore https://facebook/pages/FB-Parliament-Vellore/722940517734622 Facebook_Parliament_Krishnagiri https://facebook/pages/FB-Parliament-Krishnagiri/1430592557154178 Facebook_Parliament_Dharmapuri https://facebook/pages/FB-Parliament-Dharmapuri/171402656392983 Facebook_Parliament_Tiruvannamalai https://facebook/pages/FB-Parliament-Tiruvannamalai/502591686504699 Facebook_Parliament_Arani https://facebook/pages/FB-Parliament-Arani/572727136131719 Facebook_Parliament_Viluppuram(SC) https://facebook/pages/FB-Parliament-Viluppuram-SC/1427252240822498 Facebook_Parliament_Kallakurichi https://facebook/pages/FB-Parliament-Kallakurichi/360600820742838 Facebook_Parliament_Salem https://facebook/pages/FB-Parliament-Salem/613233478715045 Facebook_Parliament_Namakkal https://facebook/pages/FB-Parliament-Namakkal/1470529696504735 Facebook_Parliament_Erode https://facebook/pages/FB-Parliament-Erode/699919550020582 Facebook_Parliament_Tiruppur https://facebook/pages/FB-Parliament-Tiruppur/179161808940337 Facebook_Parliament_Nilgiris(SC) https://facebook/pages/FB-Parliament-Nilgiris-SC/794829590545902 Facebook_Parliament_Coimbatore https://facebook/pages/FB-Parliament-Coimbatore/529088897173680 Facebook_Parliament_Pollachi https://facebook/pages/FB-Parliament-Pollachi/669996989698184 Facebook_Parliament_Dindigul https://facebook/pages/FB-Parliament-Dindigul/617131898328903?ref=br_tf Facebook_Parliament_Karur https://facebook/pages/FB-Parliament-Karur/1427336417489916 Facebook_Parliament_Tiruchirappalli https://facebook/pages/FB-Parliament-Tiruchirappalli/179071095626016 Facebook_Parliament_Perambalur https://facebook/pages/FB-Parliament-Perambalur/196663177184526 Facebook_Parliament_Cuddalore https://facebook/pages/FB-Parliament-Cuddalore/252232594929328 Facebook_Parliament_Chidambaram(SC) https://facebook/pages/FB-Parliament-Chidambaram-SC/532414410182266 Facebook_Parliament_Mayiladuthurai https://facebook/pages/FB-Parliament-Mayiladuthurai/234029473426810 Facebook_Parliament_Nagapattinam(SC) https://facebook/pages/FB-Parliament-Nagapattinam-SC/609699079090776 Facebook_Parliament_Thanjavur https://facebook/pages/FB-Parliament-Thanjavur/572877219434799 Facebook_Parliament_Sivaganga https://facebook/pages/FB-Parliament-Sivaganga/635389766484167 Facebook_Parliament_Madurai https://facebook/pages/FB-Parliament-Madurai/621248131251717 Facebook_Parliament_Theni https://facebook/pages/FB-Parliament-Theni/221283454715656 Facebook_Parliament_Virudhunagar https://facebook/pages/FB-Parliament-Virudhunagar/170194136513243 Facebook_Parliament_Ramanathapuram https://facebook/pages/FB-Parliament-Ramanathapuram/173985459462228 Facebook_Parliament_Thoothukkudi https://facebook/pages/FB-Parliament-Thoothukkudi/1387469961494056 Facebook_Parliament_Tenkasi(SC) https://facebook/pages/FB-Parliament-Tenkasi-SC/207559672757093 Facebook_Parliament_Tirunelveli https://facebook/pages/FB-Parliament-Tirunelveli/1429388847273905 Facebook_Parliament_Kanniyakumari https://facebook/pages/FB-Parliament-Kanniyakumari/578770282190648 Facebook_Parliament_Puducherry https://facebook/pages/FB-Parliament-Puducherry/673158059375086
Posted on: Mon, 04 Nov 2013 20:11:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015