முதல் பாகம் இங்கே - TopicsExpress



          

முதல் பாகம் இங்கே வாசிக்கலாம் ( https://facebook/chandramowleeswaran.viswanthan/posts/573942042661146) --------------------------------------------------------------------------------------------------------- நவநீதன் தொடர்ந்தார், இந்தக் கடிதம் எனக்கு கிடைத்தவுடன் நான் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரை கொல்கத்தாவுக்கு அனுப்பினேன்.. விஜி மேலே நீங்க சொல்லுங்க,,, விஜயகுமார் எழுந்தார் லெட்டர் எழுதியிருக்கும் அரவிந்தன், கொடுத்திருக்கும் அட்ரஸ் ஒரு மேன்ஷன்.. மாச வாடகை, நாள் வாடகை என ரூம்கள் வாடகைக்கு கிடைக்கும்.. அங்கே அரவிந்தன் மூன்று மாசமாகத் தங்கியிருந்திருக்கிறான். நான் போவதற்கு சில நாட்களுக்கு முன்பு காலி செய்து விட்டான் . தனி ரூம்.. ஆபிஸ் விலாசம் என அவன் கொடுத்த ஆபிசில் அவன் வேலை பார்க்கவில்லை.. மேன்ஷனில் தங்கியிருக்கும் ஆட்களில் அவன் முகம் யாருக்கும் அதிகம் நினைவில்லை.. மேன்ஷன் கல்லாவுக்குப் பக்கத்திலேயே ஒரு எஸ் டி டி பூத் இருக்கிறது.. அங்கே இருக்கும் பெண் ஓரளவுக்கு அடையாளம் சொல்லியிருக்கிறாள்.. ப்ரைவேட் விசிட் என்று டி ஐஜி சார் சொல்லி அனுப்பியதால் வெஸ்ட் பெங்கால் போலிஸ் உதவியை நாடவில்லை எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.. ஏன் விலாசம் கொடுத்து , டி ஐ ஜி ரெசிடென்ஸுக்கு லெட்டர் அனுப்பியிருக்கிறான்.. இதோ பார்.. நான் தான் செய்யப் போகிறேன்.. உன்னால் என்னைப் பிடிக்க முடியுமானு சவால் மாதிரியில்ல இருக்கு இருங்க இருங்க.. ஜெயந்த் .. டென்ஷன் ஆகாதீங்க.. .. நீங்க மேலே சொல்லுங்க விஜி யெஸ் .. சார் மேன்ஷனில் அரவிந்தன் தங்கியிருந்த ரூம் .. காலியாத்தான் இருந்தது.. எதும் க்ளூ கிடைக்குமானு உள்ளோ போய் தேடிப் பார்த்தேன்.. ஹு ஹூம் .. எதும் கிடைக்கலை.. .. அவன் இதை சென்னையில் நிகழ்த்தப் போவதாகக் கடிதம் சொல்கிறது.. அவன் கடிதம் அனுப்பியது கொல்கத்தாவிலிருந்து.. ஆகவே அவன் இந்த இரண்டு நகரங்களுக்கிடையே பயணத்திருக்க வேண்டும் என்ற யூகத்தில்கொல்கட்டா டு மெட்ராஸ் கடந்த இரண்டு மாசம் எல்லா ஃப்ளைட் பாசஞ்சர் லிஸ்ட்டும் வாங்கிப் பார்த்துட்டேன்.. I mean all airlines .. அதிலே அரவிந்தன் என பெயர் வரும் பாசஞ்சர்கள் எல்லாரையும் தனியா லிஸ்ட் பண்ணிருக்கேன்.. ஜாஸ்தி இல்லை.. 20 பேர் தான் வருது.. அதுல 2 பேர் ரீபீடட் ட்ராவல் பண்ணிருக்காங்க.. அவங்க எல்லாம் பிசினெஸ் மென்.. சந்தேகப்பட வேண்டாம்.. மிச்ச பேர் எல்லாம் ஒரு தரம் விசாரிச்சு வேணாப் பார்க்கலாம்.. ஆனால் எவ்வளவு தூரம் நமக்க்ய் பயன் தரும்னு சொல்ல முடியாது ஏன் விஜயகுமார்.. கொல்கட்டா மெட்ராஸ் செக்டர் மட்டுமில்லாம , கொல்கட்டா பெங்களூர், ஹைதராபாத் இதெல்லாம் ஒரு தரம் செக் பண்ணிடலாம்.. ட்ரெயின் பாசஞ்சர் லிஸ்ட் ட்ரை பண்ணலையா இல்லை சார்.. இப்ப நோட் பண்ணிக்கிறேன்.. நாளைக்குள்ள வாங்கிடலாம் சார்.. அதையும் முழுசும் விசாரிச்சுடலாம் நாளை வரைக்கும் தள்ளிப் போட வேண்டாம்.. இதோ உடனே ஏற்பாடு பண்ணிரலாம்.. இன்டெர்காமை உயிர்பித்து ஜார்ஜ்.. கவனமா கேளுங்க.. last two months Kolkatta to Chennai எல்லா ட்ரெயின் கம்ப்ளீட் பேசஞ்சர் லிஸ்ட் இன்னமும் அரை மணி நேரத்திலே மெயில்ல வாங்கணும்.. ரயில்வேலே டாப் மேனேஜ்மென்ட் லெவல்ல பேசி வாங்கணும்.. புரிஞ்சதா.. Not only urgent , very critical .. quick விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான்.. நான் இதை டெல்லிக்கு சொல்லியாகணும்.. ஹோம் செகரட்ரிக்கிட்ட பேசிட்டு சொல்லணும்.. ஜெயந்த்..பிரசிடென்ட் விசிட் செக்யூரிட்டி அரேஞ்ச்மென்ட்ஸ் ?? ஜெயந்த்.. நல்ல உசரம்.. Inspector General of Police சார்.. எல்லாம் முறைப்படி நடந்து கொண்டிருக்கிறது.. இப்போது இன்னமும் கவனம் சேர்த்துக் கொள்கிறோம்.. I will discuss this separately sir Good .. நான் உங்கள் யாருக்கும் சொல்லத் தேவையில்லை.. ஆனாலும் சொல்லி வைக்கிறேன்.. இந்த மீட்டிங் விபரங்கள் மிகவும் Confidential .. வெளியில் பேசி வைக்க வேண்டாம்.... இப்போது எல்லோரும் போகலாம்.. நவநீதன்.. நீங்களும் விஜயகுமாரும் மட்டும் இருங்க.. என் ரூமுக்குப் போய் பேசலாம்.. நீங்கள் இரன்டு பேரும் அரைமணி நேரம் கழித்து கூட வரலாம்.. எல்லாருக்கும் தேங்க்ஸ்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்.. நாம் மறுபடி சந்திக்க வேண்டும்.. உங்களுக்கு அந்த விபரம் நானே ஃஃபோன் செய்கிறேன் நீண்ட வராண்டா காலியாக இருந்தது.. என்ன் விஜி..இது எப்படினு நீ நினைக்கிறாய்.. புஸ்ஸுனு போய்டுமா இல்லை சம்திங் சீரியஸ் சார் நாம சீரியஸ்னே நினைச்சு சின்சியரா இன்வெஸ்டிகேட் பண்ணுவம்.. எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்.. தட்ஸ் ரைட்.. நான் கீழே ஐ ஜி கிட்ட ஒரு விஷயம் பேசிட்டு வந்துடறேன்.. நீயும் வரதா இருந்தா வரலாம் இல்லை சார்.. நான் வெளில போய்ட்டு சின்னதா நடந்துட்டு வரேன்.. இதிலே இன்னமும் நிறைய வேலை இருக்கும் போலிருக்கு.. ஸ்மோக்கிங்க் ????? ஓகே சிரித்து தலையாட்டி தற்காலிக விடை கொடுத்துவிட்டு சரேலென நடந்தார் வாங்க .. ப்ளீஸ் உட்காருங்க.. நீங்களும் உட்காரலாம் விஜயகுமார்.. ரயில்வேலேர்ந்து டீடெயில் வாங்கிட்டாங்க.. எக்ஸெல் ஷீட் அனுப்பிருக்காங்க.. இந்தாங்க.. இதுல எதுனா கிடைக்குதானு பாருங்க லேப்டாப்பை திருப்பி நகர்த்தினார் ctrl + f, aravind , find all வயது அறுபது.. ஹூ ஹூம் சர்மிளா அரவிந்தன்.. F .. இவளில்லை.. அரவிந்த் அகர்வால்.. வயது 13 .. அடச்சை அரவிந்தன்.. வயது 34 .. ஆஹா பொருந்துகிறது என்னவெனப் பார்க்கலாம் அரவிந்தன்.. வயது 34 .. முதல் வகுப்பு ஏசி., Train Number 12841.. Coromandel Express நேற்று புறப்பட்டு இன்றைக்கு வருகிறது ட்ரெயின் சார் இதோ பாருங்கள்.. ஸ்கீரினில் விரல் வைத்து காண்பித்தார் ஓ .. arrival ஐந்தே கால் எனப் போட்டிருக்கிறதே.. மணி இப்போதே ஐந்தே முக்கால் ஆகிவிட்டது.. இருங்கள் எதற்கும் கேட்டுப் பார்க்கலாம்.. இது என்ன ஸ்டேஷன்.. சனியன் இங்கேயிருந்து கிளம்பாது போலிருக்கிறதே.. அரவிந்தன் கம்பார்ட்மென்ட் வாசலுக்கு வந்து பார்த்தான் ட்ரெயினை அதிசயமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு போனவனிடம் எக்ஸ்யூஸ்மி.. இது என்ன ஸ்டேஷன்.. இங்கேர்ந்து மெட்ராஸ் எவ்ளோ தூரம் இது மீஞ்சூர்.. உங்க ட்ரெயின் ஜஸ்ட் கொஞ்ச நேரத்திலே போய்டும் தாங்க்ஸ் கதவு சாத்தி விட்டுத் திரும்பும் போது, டாய்லெட்டிலிருந்து டி டி ஆர் வந்தார் டி டி ஆர் சார் வண்டி ஏன் இங்கே ரொம்ப நேரம் நிற்கிறது.. எனி ப்ராப்ளம்.. யெஸ் சார்.. இஞ்சினில் ஏதோ ப்ராப்ளம்.. சரியாகிவிடும்.. அரைமணியில் கிளம்பிடும்.. Sorry for the inconvenience.. by the by நான் டி டி ஆர் இல்லை.. ட்ரெயின் சூப்பிரண்டன்டன்ட் ஓ அப்படியா.. நீங்களே அரை மணி என்று சொல்லிவிட்டீர்கள்.. எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட்.. இங்கிருந்து மெட்ராஸ் by road போய்விடலாமா .. ரோடு வழியை விட .. அடிக்கடி லோக்கல் ட்ரெயின் வருமே அதிலே போனால் ஈசி.. அதோ அந்த ப்ளாட்பாரத்துக்குப் போனால் வரும் ட்ரெயினில் ஏறினால் ஆச்சு தாங்க்ஸ் ஜார்ஜ்.. தாங்க்யூ சோ மச்.. கொரமாண்டல் எக்ஸ்பிரஸ் லேட்டாம்.. இப்ப கிளம்பினா புடிச்சிரலாம்.. விஜி.. வண்டி இருக்கா நான் பார்த்துக்கிறேன் சார்.. இருங்க .. வண்டிக்கா பஞ்சம் இங்கே .. நூறு கார் சும்மா நிக்குது (தொடரும்)
Posted on: Sat, 09 Nov 2013 05:36:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015