*"The quick brown fox jumps over the lazy dog." என்ற - TopicsExpress



          

*"The quick brown fox jumps over the lazy dog." என்ற இந்த வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது. *abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback. *ஆங்கிலத் தட்டச்சுப் பலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter. *ஏழு என்பது ராசி இல்லாத எண்ணாக கருதியதால் லத்தீன் நாட்டினர் அதை எழுதி பின் அடித்து விடுவர். *ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது. *மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது.. *இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்த்து என்கிறோம். இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது. * a,b,c,d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero) , ஒன்று (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறவில்லை..
Posted on: Mon, 26 Aug 2013 15:37:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015