குறள் எண்: - TopicsExpress



          

குறள் எண்: 113 திருக்குறள்: நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்: தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுநி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும். பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்: நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக. கலைஞர் மு. கருணாநிதி தமிழ் விளக்கம்: நடுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். ಕನ್ನಡ ಅನುವಾದ: ಸಮದರ್ಶಿತನವನ್ನು ತೊರೆದು ಉಂಟಾಗುವ ಸಂಪತ್ತು, (ಅದು ನಮಗೆ) ಒಳಿತನ್ನೇ ತಂದರೂ ಒಡನೆಯೇ ಕೈಬಿಡಬೇಕು. हिंदी अनुवाद: तजने से निष्पक्षता, जो धन मिले अनन्त । भला, भले ही, वह करे तजना उसे तुरन्त ॥ Deutsch Übersetzung: Scheint etwas auch Gutes zu bringen - ist der Gewinn mit Parteilichkeit verbunden, lass ihn augenblicklich fahren. русский перевод: Доставшееся неправедным путем богатство следует оставить, даже если оно приносит тебе блаженство. Français Traduction: Abandonner sur-le-champ la richesse acquise hors des règles de la Justice, quand bien même elle ne causerait que du bien. English Translation: Though only good it seem to give, yet gain By wrong acquired, not een one day retain. English Explanation: Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.
Posted on: Sun, 14 Sep 2014 14:34:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015