“தமிழ் மக்களின் - TopicsExpress



          

“தமிழ் மக்களின் அபிலாஷைகள், விருப்பங்கள், உணர்வுகளை இனியாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ­ மதித்து நடக்க வேண்டும்” என்று மன்னார் ஆயர் அதிவண. இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார். அரசின் சலுகைகளுக்குத் தமிழர்கள் அடிபணிந்தவர்கள் அல்லர் என்பதை வடமாகாண சபைத் தேர்தலில் எமது மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.வடபகுதியை விரைவில் பெளத்த மயமாக்குவோம் என்று தென்னிலங் கையிலிருந்து கூக்குரலிட்ட சிங்கள இனவாதக் கட்சிகளுக்கும் வடக்குத் தேர்தலில் எமது தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் விஞ்சி சரித்திர வெற்றிபெற்றமை தொடர்பில் நேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,“சர்வதேசத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் ஏகோபித்த எழுச்சியைக் காட்டியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமது ஏகப் பிரதிநிதிகள் என்பதை எமது மக்கள் நிரூபித்துள்ளனர்.இந்தத் தேர்தலில் தமிழரின் அரசியல் ஆழம் மற்றும் தமிழ் இளைஞர், யுவதிகளின் மாபெரும் சக்தி வெளிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, அரசியல் ரீதியாக சாத்வீக ரீதியாக தமிழர் உரிமைகளை வெல்ல நாம் தொடர்ந்து போராட வேண்டும்” என்றார். நன்றி (TamilCNN)
Posted on: Tue, 24 Sep 2013 14:42:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015