நமது மாவீரர்கள் நினைவாக - TopicsExpress



          

நமது மாவீரர்கள் நினைவாக ........ எதிர்வரும் நவெம்பர் 27ஆம் திகதி நாம் நமது மதிப்புக்குரிய மாவீரர்களை நினைவு கூர்கிறோம். சென்ற மே மாதப் பேரழிவின் பின்பாக வரும் மாவீரர்நாள் என்பதினால் அது நமது தேசம், இனம் தழுவிய சோகதினமாகவும் அமைகிறது. ஈழத்தமிழர்கள் பெரிய இழப்புகளைச் சந்தித்தபோது எங்களுக்கு தம் ஆதரவை வழங்குவதற்காக உயிர்த்தியாகம் செய்த தமிழகஉறவுகள் முத்துக்குமரன்,ரவிச்சந்திரன்,தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம் ..... போன்றோர்,ஜெனிவாவில் உயிர்த்தியாகம் செய்த இங்கிலாந்துத் தமிழர் முருகதாசன் என்போரின் தியாகவேள்விகளால் இந்த மாவீரர்நாள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் எல்லோருக்குமுரிய நினைவுநாளாகவும்,வழிபாட்டுநாளாகவும் உயர்வும் ஏற்றமும் பெறுவது விசேட கவனிப்புக்குரியது. உலகெங்கும் கொண்டாடப்பெறும் தமிழரின் மாவீரர்நாள் என்றதும் அண்மையில் மேற்குநாடுகள் சிறப்பாகக் கொண்டாடிய நவெம்பர் 11 நினைவுநாள் பற்றிய எண்ணங்கள் மேலெழும்புகின்றன.மேற்குநாட்டினர் முதலாவது உலகப்போரிலிருந்து அதன்பின்பாக இடம்பெற்ற எல்லாப்போர்களிலும் உயிர்நீத்த தமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். தலைவர்களும் மக்களும் ஒன்றாகக்கூடி மறைந்த வீரர்களுக்கு,அவர்களின் உயிர்த்தியாகங்களுக்கு மதிப்பளித்து நன்றிசெலுத்தும் அவர்களின் மரபை,சிறப்பை அது காட்டுகிறது. ஆனால் நம்மிடம் அந்த மரபு இன்னும் உறுதியானவகையில் ஏற்படுத்தப்படவில்லை..இதற்கு என்ன காரணம்? ஏன் நாம் ஆளப்படுவோராக,அடிமைகளாக,அகதிகளாக அலைந்து திரிகிறோம்? இந்த மேற்குநாடுகளுக்கு வந்துள்ள நாங்களாவது நமது கண்களை அகலத்திறந்து நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது? ஏன் அவை அப்படி நடக்கின்றன என்று ஆராய்கிறோமா? அவற்றிலிருந்து ஏதாவது பாடங்களைப் படித்துக் கொள்கிறோமா? இவைபற்றி நாம் சிந்தித்து நம்வாழ்வில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தாலொழிய நமக்கு விடுதலையோ விமோசனமோ கிடைக்காது. நமது இலங்கை,இந்தியா போன்ற நாடுகளை முன்பு ஆண்ட இங்கிலாந்துதேசம் அதன் பரப்பைப்போல் நூற்றியிருபத்தைந்து[125] மடங்கான பரப்புடைய பிரித்தானியப்பேரரசைக் கட்டி ஆண்டது என்பது நமக்குத் தெரியுமா? ஐக்கிய அமெரிக்கஅரசு, கனடா போன்ற வட அமெரிக்க நாடுகளும் சிறிய இங்கிலாந்தின் ஆட்சியில் இருந்தன என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.An oak planted in a flowerpot [ பூத்தொட்டியில் நடப்பட்ட ஆலமரம்] என அது வர்ணிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பை ஆங்கிலேயர்கள் அடைவதற்கு அவர்களிடம் காணப்பட்ட தீவிரமானதேசப்பற்று,வீரம் மிகுந்த தன்னம்பிக்கை என்பவையே காரணமாகும். நம்மிடம் நமது அடிமைமோகம், குறுகியசுயநலம்,பொறாமை என்பன நீங்கி தேசப்பற்று,மானஉணர்வு,தன்னம்பிக்கை,ஒற்றுமை என்பன எப்போது வரும்? அப்போதுதான் போர்க்குணமும் வீரமும் மிகுந்த மறவர்களாக, நாம் நமது மாவீரர்களை நமது மதிப்புக்குரிய காவல்தெய்வங்களாக வாழ்த்தி வழிபடும் வழக்கமுடையவர்களாவோம். உலகம் வியக்கும் மிகப்பெரிய பிரித்தானியப்பேரரசை உருவாக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் அதற்குக் காரணமாக இருந்த தமது வீரப்புதல்வர்களைஎப்படிப்போற்றினார்கள், மதிப்பளித்தார்கள் என்பது நமக்கு ஒரு முன்மாதிரியாக,வழிகாட்டியாக அமையும். காலத்தால் அழியாத,எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய,உயிர்ப்பும்,உணர்வும் கொண்ட நினைவுச்சின்னங்களாக,ஆங்கிலக்கவிஞர்கள் பல கவிதைகளை ஆக்கியுள்ளார்கள்.வீரத்திற்குக் காட்டும் பெருமதிப்பை வெளிப்படுத்துவதாக அவைகள் அமைந்துள்ளன.அவற்றுள் தெரிந்தெடுத்த சில கவிதைகளையும்,சில அழகான வரிகளையும் கீழே பார்ப்போம். With proud thanksgiving,a mother for her children, England mourns for her dead across the sea. Flesh of her flesh they were,spirit of her spirit, Fallen in the cause of the free. ....................... They shall grow not old,as we that are left grow old: Age shall not weary them,nor the years condemn. At the going down of the sun and in the morning We will remember them. .............. But where our desires are and our hopes profound, Felt as a well-spring that is hidden from sight, To the innermost heart of their own land they are known As the stars are known to the night; As the stars that shall be bright when we are dust, Moving in marches upon the heavenly plain, As the stars that are starry in the time of our darkness, To the end,to the end,they remain. -- For the Fallen by Laurence Binyon[1628 - 1688]. கடல் கடந்து சென்று உயிர்நீத்த தன் பிள்ளைகளுக்காக இங்கிலாந்துமாதா அஞ்சலி செலுத்துகிறாள்.அவர்களுக்கு பெருமிதத்துடன் நன்றி செலுத்துகிறாள்.விடுதலைக்காக வீழ்ந்துபட்ட அவர்கள், இங்கிலாந்துமாதாவின் சதையின் சதையாக,ஆத்மாவின் ஆத்மாவாக இருப்பவர்கள்.இங்கு எஞ்சியிருக்கும் நாம் வயதுபோய் முதுமையடைவதுபோல் அவர்கள் முதுமையடைவதில்லை;காலத்தால் அவர்களை மங்கவைக்கமுடியாது.ஆண்டுகள் பல சென்றாலும் அவர்கள் அழிவதில்லை;கதிரவன் மறையும்போதும் காலை புலரும்போதும் நாங்கள் அவர்களை நினைப்போம். எமது ஆசைகள்,ஆழமான ஆர்வங்கள், கண்ணுக்குத்தெரியாத ஊற்றுப்போன்று உணரப்படுவது போல்,இரவுக்குத்தெரிந்த அதன் நட்சத்திரங்களைப்போல்,அவர்கள் தங்கள் தாய்நாட்டின் அந்தராத்மவுக்கு அறிமுகமானவர்கள்; நாம் மரணித்து மண்ணாகும்போதும் நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பவர்கள்,சுவர்க்கவெளியில் அணிவகுத்துச் செல்பவர்கள்,எமக்கு இருளான காலத்திலும் விண்மீன்களாக ஒளிர்பவர்கள், அந்த இறுதி முடிவு காலம்வரை அவர்கள் நிலைத்திருப்பார்கள். Here dead lie we because we did not choose To live and shame the land from which we sprung. Life,to be sure,is nothing much to lose; But young men think it is,and we were young. -- Here dead lie we because we did not choose by A.E.Housman [1859 - 1936]. நாம் பிறந்த தாய்மண்ணுக்கு தலைக்குனிவு ஏற்படுத்தி வாழவிரும்பாததால் இங்கு இறந்தவர்களாகிக் கிடக்கிறோம்.உயிரை இழப்பதென்பது,நிச்சயமாக,பெரிய விடயமல்ல,ஆனால் இளம்வயதினர் அதனைப் பெரிய விடயமாகக் கருதுகிறார்கள் நாங்களும் இளம் வயதினர்தான். In our heart of hearts believing Victory crowns the just, And that braggarts must Surely bite the dust, Press we to the field ungrieving, In our heart of hearts believing Victory crowns the just. Hence the faith and fire within us Men who march away. -- Men who march away by Thomas Hardy [1840 - 1928] நீதி வெல்லுமென இதயத்தின் இதயத்தில் நாங்கள் நம்பினோம்;வீண்பெருமை பேசுபவர்கள் மண்கவ்வுவார்கள் எனக்கருதி கவலையின்றிக் களத்தில் நாம் முன்சென்றோம். நீதிவெல்லுமென இதயத்தின் ஆழத்தில் நாம் நம்பினோம்;அந்த நம்பிக்கையும் நெருப்பும் எம்முள் எரிந்துகொண்டிருந்ததால் அணிவகுத்து முன்னேறினோம் நாம். When the blast of war blows in our ears Then imitate the action of the tiger; Stiffen the sinews,summon up the blood, Disguise fair nature with hard-favoured rage; Then lend the eye a terrible aspect; ................ On,on you noble English, Whose blood is fet from fathers of war-proof- Fathers that,like so many Alexanders, ................. Dishonour not your mothers; now attest That those whom you called fathers did beget you! -- Henry V by William Shakespeare [1564 - 1616] உலகப்புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர்,கவிஞர் ஷேக்ஸ்பியரின் தெரிந்தெடுத்த சில வரிகள் இவை: போர்முரசின் ஒலி நம் காதில் வீழ்ந்ததும் புலிபோல் செயற்படுங்கள்;உடம்பில் முறுக்கு ஏறட்டும்;இரத்தம் கொதிக்கட்டும்;சாந்தகுணம் மறைந்து சீறும்சினம் வெளிப்படட்டும்;பின் கண்களில் கொடுமை கொப்பளிக்கட்டும்; பெருமகனான ஆங்கிலேயனே,தொடர்ந்து முன்னேசெல்,போருக்கு அஞசாத தந்தையரின் இரத்தம் கொண்டவனே,பல அலெக்சாண்டரைப் போன்ற தந்தையர்களைப்பெற்றவர்களே; உங்கள் தாய்க்கு தலைக்குனிவை ஏற்படுத்தாதீர்கள்,யாரைத் தந்தை என்று அழைத்தீரோ அவரின் பிள்ளை என்பதை நிலைநிறுத்துங்கள். முழுமையான பாடலில் இதுபோன்ற வீர உணர்வை ஊட்டும் பலவரிகள் நிறைந்துள்ளன.விரிவஞ்சி சிலவற்றை மட்டுமே தந்துள்ளேன். To every man upon this earth Death cometh soon or late. And how can man die better Than facing fearful odds, For the ashes of his fathers, And the temples of his Gods, ...................... For Romans in Romes quarrel Spared neither land nor gold, Nor son nor wife,nor limb nor life, In the brave days of old. --Horatius by Lord Macaulay [1800 - 1859] எல்லாமனிதருக்கும் இறப்பு இன்றோ நாளையோ வரும்;அச்சமூட்டும் தடைகளையும் எதிர்த்து மரணிப்பதைவிட மேலானது எது? நம் தந்தையர்களின் சாம்பலையும் நம் ஆண்டவனின் ஆலயங்களையும் பேண அதைச்செய்வோம். வீரம் மிகுந்த அந்தக்காலத்தில் உரோமாபுரிக்கான போரில் ரோமர்கள்,காணிநிலத்தையோ,பொன்னையோ,மகனையோ,மனைவியையோ, உடலையோ,உயிரையோ ஒருபொருட்டாகக் கருதுவதில்லை. We are the Dead. Short days ago We lived,felt dawn,saw sun set glow, Loved and were loved,and now we lie In Flanders fields. Take up our quarrel with the foe: To you from failing hands we throw The torch;be yours to hold it high. If ye break faith with us who die We shall not sleep, -- In Flanders fields by John McCrae [1872 - 1918] நாங்கள்தான் அந்த இறந்தவர்கள்; சில நாட்கள் முன்பாக நாங்கள் உயிருடன் இருந்தோம்;சூரிய உதயத்தை உணர்ந்தோம்;மறையும் சூரியனின் வண்ணம் பார்த்தோம்;நேசித்தோம்,நேசிக்கப்பட்டோம்; இப்போதோ இந்தக் களத்தில் இறந்துகிடக்கிறோம். எதிரியுடன் எங்கள் போரைத்தொடருங்கள்;சோர்ந்திடும் கைகளால் இந்தச்சுடரை உங்களிடம் ஒப்படைக்கிறோம்;அதனைத் தூக்கிப் பிடிப்பது உங்கள் கடன்; இறந்த எங்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்தால் எங்களால் நிம்மதியாகத் தூங்கமுடியாது. If I should die,think only this of me: That theres some corner of a foreign field That is forever England.There shall be In that rich earth a richer dust concealed; A dust whom England bore,shaped,made aware, Gave,once,her flowers to love,her ways to roam, A body of Englands,breathing English air Washed by the rivers,blessed by suns of home. -- The Soldier by Rupert Brooke [1887 - 1915] [Rupert Brooke was educated at Rugby and Kings College Cambridge;Fellow of his College;Brilliant Undergraduate with Patriotism and anxious to die for his country; Died while in Service;Only 28 years old.] நான் இறந்தால் என்னைப்பற்றி இதைமட்டும் நினைவிலிருத்துங்கள்; அந்நியநாட்டின் ஏதோ ஒரு மூலை --அது எப்போதும் இங்கிலாந்திற்கே உரியது; அந்தச் சிறப்பான நிலத்தில் அதைவிடச் சிறப்பான சாம்பல் மறைந்துள்ளது;இங்கிலாந்து பெற்றுப்பேணி உருவாக்கி உணர்வூட்டிய சாம்பல் அது இங்கிலாந்தின் மலர்களை நேசித்தவன்,அதன் தெருக்களில் அலைந்து திரிந்தவன்;இங்கிலாந்துக்குரிய உடம்பு,அதன் காற்றைச் சுவாசித்தவன்;அதன் ஆறுகளில் நீராடியவன்,அதன் சூரிய ஒளியில் காயும் பேறுபெற்றவன். இக்கவிஞர் முதலாவது உலகப்போரில் இறந்தவர். 28வயதுவரை மட்டுமே வாழ்ந்தவர்.மேலே குறிக்கப்பட்டுள்ளவாறு கல்வியில் மிகுந்த சிறப்புடன் விளங்கியவர். இவரைப்போன்றே Robert Palmer என்ற கவிஞரும் முதலாம் உலகப்போரில் இறந்தவர்;கல்வியில் மிகச்சிறப்பாக விளங்கியவர். Robert Palmer[1888 - 1916] died in action.RP won Scholarship to University College,Oxford;A First in Honours,Deeply Religious; President,Oxford Union,University Church Union;Second son of the Second Earl of Selborne. கல்வியில் சிறந்த இவர்கள் தம் தாய்நாட்டிற்காக,அதன் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயங்காத இளைஞர்கள்.வசதியான உயர்குடும்பத்தில் பிறந்தபோதும் தேசப்பற்று மிக்கவர்கள்.அதனாலேயே அவர்கள் ஆள்பவர்களாக,ஆதிக்கம் செலுத்துபவர்களாக விளங்குகிறார்கள். How many men of England died To prove they were not dead. --For a War Memorial by G.K.Chesterton [1874 -1936]. அழகான இருவரிகள்;இங்கிலாந்து மக்கள் வீரமற்ற நடைப்பிணங்களல்ல என நிரூபிக்க எத்தனை வீரர்கள் உயிரை இழந்தனர்? என்று வினவுகிறார் கவிஞர்.அதாவது அந்தச்சமூகம் உயிருடன் -- உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை நிரூபிக்க தமது உயிரைக் கொடுத்தவர்கள் அவர்கள் எனப் புகழ்கிறார். எமது மாவீரர்களும் தமிழீழம் உயிருடன்,உயிர்ப்புடன்,வீர, மானஉணர்வுடன்,விடுதலை வேட்கையுடன் உள்ளது என்பதை நிரூபிக்க உயிர்த்தியாகம் செய்தவர்கள். What though the field be lost? All is not lost; th unconquerable Will, And study of revenge,immortal hate, And courage never to submit or yield; And what is else not to be overcome? -- Paradise Lost by John Milton [1608 - 1674] நிலத்தை இழந்துவிட்டால் என்ன? எல்லாமே இழக்கப்படவில்லை; வெல்லமுடியாத நெஞ்சுரம் [மன உறுதி], பழிவாங்கும் பண்பு, அழியாத பகைமை, பணிவோ விட்டுக்கொடுப்போ இல்லாத வீரம்,என்பவை வழியாக வேறு எவற்றைத்தான் வென்றடையமுடியாது? சிறந்த கவிஞரான மில்டனின் இந்தக்கூற்று பெரிய இழப்பைச் சந்தித்துள்ள நமக்கு ஆறுதலும் தேறுதலும் தருவதாகும். நம்மவர்கள் தமது சோர்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு,அமைப்புரீதியாக ஒன்றுபட்டு நெஞ்சுரத்துடன்,உறுதியும் உரமும் கொண்டவர்களாக உழைப்பின் நாம் மீண்டும் எழுச்சி பெறலாம். நமது மாவீரர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய பெரிய அஞ்சலி, நன்றிக்கடன் அதுவேயாகும். நமது எதிர்காலச்சுபீட்சமும்,விடுதலையும் அவற்றிலேயே தங்கியுள்ளன.அந்த 125மடங்கான பிரித்தானியப் பேரரசைக் கட்டி ஆண்ட ஆங்கிலேயர்கள் எப்படி வீரத்தைப் போற்றினார்கள்,தமது மாவீரர்களுக்கு மதிப்புக்கொடுத்தார்கள் என்பது நமக்கு சிறந்த முன்மாதிரியாக அமையட்டும்.காலையும் மாலையும் பிறபொழுதிலும் அவர்களை மனதில் நினைந்து நினைந்து அதன்மூலம் நமக்கும், நமது இளம்தலைமுறையினருக்கும் வீர உணர்வையும்,விடுதலைஉணர்வையும் ஊட்டுவோம். எமது மாவீரர்நாளின் போது, ஆங்கிலக்கவிஞர்கள் வீரத்தை,வீரர்களை எப்படிப் புகழ்ந்துள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.ஆங்கிலக்கவிதைகள்,அவற்றின் தமிழ்வடிவம் இரண்டும் இடம்பெறுவதால் நீளமாக அமைவது தவிர்க்கமுடியாதது.அவர்களின் கருத்துகள் சில உங்கள் உள்ளங்களையும் தொடலாம்,உணர்வூட்டலாம். இதன் பிரதியை அறிமுகமான அனைவருக்கும் அனுப்புங்கள்.சங்கிலித்தொடர் போன்று இந்த கருத்துப்பரப்பல் தொடர்ந்து செல்லட்டும். நன்றிகள் தமிழர்பேரவைத் தகவல்மையம்
Posted on: Wed, 27 Nov 2013 12:53:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015