மற்றவர்களைப் பற்றி...... . . . . - TopicsExpress



          

மற்றவர்களைப் பற்றி...... . . . . . . . . . . . . . . . . . . . . . நம்மில் சிலர் தாங்கள் உயர வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தாழ்த்தி பேசுவதை பார்க்கின்றோம். அவர்கள் தங்களை உயர்த்தி, நான் அப்படி செய்தேன், இப்படி செய்தேன் என்று தற்பெருமையுடன் பேசுவதையும் பார்த்து வருகின்றோம். நமக்கு அந்த எண்ணமே வேண்டாம். மற்றவர்கள் நம் செயலைக் குறித்து தவறாக சொல்கின்றார்களா? கவலைப்படாதீர்கள். மற்றவர்களை குறித்து தவறாக பேசி மகிழுவது உலக மனிதனின் இயல்பு .அவர்கள் எப்போதும் அப்படித்தான் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவை இல்லாமல் அவர்களிடம் சண்டையிட்டு நம் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். நம்மில் பெரும்பாலோர் கூட, மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைத்துக் கொண்டுவருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவையே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதனால்தான். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித் தன்மை உண்டு. அதனால் ஒவ்வொருவருக்கும் எண்ணம்,செயல் வேறுபடும். ஆகவே, நாம் நமது செயலில் மட்டும் கவனம் செலுத்துவோம். மற்றவர்களின் செயலில் தலையிடுவதை தவிர்ப்போம்.. உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்... இன்றைய நாள் தங்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்.. "" இன்றைய சிந்தனை ""
Posted on: Wed, 03 Jul 2013 06:47:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015