மகளைப் பெற்ற - TopicsExpress



          

மகளைப் பெற்ற அப்பாக்கள்… இங்கு சேரன் மகள் காதல் விவகாரம் பற்றி பேசும் அனைவருக்கும்... சேரன் காதலை வைத்தே படங்களை எடுத்தார் ஆனால் தன் சொந்த வாழ்கையில் தன் மகளின் காதலை எதிர்கிறார்... ஊருக்கு ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயம் என்று தாறு மாறாக கருத்துகள் சேரனுக்கு எதிராகவே இருக்கின்றன.. நான் உங்களை ஒன்றை கேட்டு கொள்கிறேன் நீங்கள் ஒரு மகளை பெற்று, அவள் ஒரு பொறிக்கி , புறம்போக்கை , குடிகாரனை காதலித்தால், வாங்க மாப்பிள வந்து என்கூட ஒரு ரவுண்டு போடுங்க, அப்புறம் அப்பிடியே என் பெண்ணையும் நல்லா காதால் பண்ணுங்க.. அவள கல்யாணம் பண்ணுங்க , கர்ப்பம் ஆக்குங்கள் அப்பிடியே நடுத்தெருவுல விட்டுட்டு போய் விடுங்க..என்று எத்தனை பெண்ணை பெற்ற அப்பாக்கள் இப்படி செய்வீர்கள். சேரனும் காதல் செய்து கல்யாணம் செய்தவர்தான், ஆனால் சேரன் ஒரு நல்ல படைப்பாளி, அவரின் திரைப்படங்கள் அவரின் வெற்றி எல்லாம் அவரின் கடின உழைப்பால் கிடைக்க பெற்றன. எந்த ஒரு தந்தையும் தன் பிள்ளைகளை நல்லா வாழ வைக்கத்தான் நினப்பார்கள்..பொருந்தா காதல் என்றுமே வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது. நடந்தவைகள், நடப்பவைகள், நடக்கப்போகின்றவைகள் எல்லா அவசர காதலும் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், திசை மாறி சீரழிந்து வந்த நிலையைத்தான் நாம் பார்த்து கொண்டு இருக்கின்றோம். இந்த உலகில் ஒரு சில காதலர்களைவிட 99% காதல் சரியாக அமையாமலேயே போய்விட்டன. தயவு செய்து சேரனை ஒரு நடிகனாக, இயக்குனராக பார்க்காமல், ஒரு சிறந்த தன் மகள் நன்றாக வாழ வேண்டும் என்று போராடும் ஒரு சராசரி தகப்பனாக பாருங்கள். ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக ஒரு மகள் இருப்பாள், அவள் ஒரு நல்லவனோடு நன்றாக நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்களாகவே இருப்பீர்கள். நன்றி.. என்றும் தமிழன் என்ற பெருமையுடன்.. இள.சா.குமரேசன். savukku.net/index.php?option=com_content&view=article&id=1862:2013-08-03-20-51-13&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19
Posted on: Sun, 04 Aug 2013 15:41:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015